வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடாது என கூறப்படுகிறது. அப்படியிருக்க பச்சை வாழைப்பழத்தை எடுத்து கொள்ளலாமா என்ற தயக்கம் பலருக்கும் இருக்கும். பச்சை வாழைப்பழத்தில் நிறைய சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.
24
பச்சை வாழைப்பழம் உண்ணும்போது நம் வயிற்றில் உள்ள குடல் புண்களை குணமடைகின்றன. நமது உடலில் சுரக்கும் அமிலங்களால் வரும் அல்சர் எனும் குடல்புண்கள் கூட பச்சை வாழைப்பழம் உண்பதால் ஆறிவிடும்.
34
இதில் ஸ்டார்ச் இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுக்கு பாதிப்பு உண்டாக்காது என கூறப்படுகிறது. ஆகவே பச்சை வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என முன்னோர் கூறியுள்ளனர்.
உடல் எடையை குறைக்க நினைக்கும் ஆட்கள் கூட பச்சை வாழைப்பழத்தை உண்ணலாம். இதில் அதிக ஆற்றல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மஞ்சள் வாழைப்பழத்தை ஒப்பிட்டால் பச்சை வாழைப்பழத்தில் தான் அதிக அளவு பொட்டாசியம் சத்து இருக்கிறது.