'மார்பகத்தைப் பெரிதாக்க சொன்னாங்க' பாலிவுட் இயக்குநர் குறித்து பகீரங்கமாக போட்டுடைத்த நடிகை சமீரா ரெட்டி

First Published | Feb 1, 2023, 6:06 PM IST

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்க எப்படியெல்லாம் அட்ஜஸ்ட் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என்ற இருண்ட பக்கம் குறித்து நடிகை சமீரா ரெட்டி பகீரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். 

திரைப்பட நடிகைகள் வாழ்க்கை எளிதானது அல்ல. சினிமா துறையில் நிலைத்து நிற்க எந்த லெவலுக்கும் போக வேண்டும் என சில திரையுலக பிரபலங்கள் பகீரங்கமாகவே தெரிவித்துள்ளனர். அண்மையில் மீ டூ  (me too) பிரச்சாரம் வாயிலாக தங்களுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவங்களையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தற்போது பாலிவுட்டின் மற்றொரு மோசமான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த சமீரா ரெட்டி, 2002ஆம் ஆண்டு பங்கஜ் உதாஸின் இசை ஆல்பத்தில் நடித்தார். அப்படிதான் பாலிவுட்டில் சமீரா ரெட்டி அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து 'மைனே தில் துஸ்கோ தியா' மூலம் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, முதல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் வசப்படுத்தினார். இது தவிர நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானார். 

Tap to resize

தன்னுடைய பதின்ம வயது வரை மற்ற பெண்கள் போலவே சுட்டித்தனமாக திரிந்தவர், கஷ்டப்பட்டு உழைத்து சினிமாவுக்குள் நுழைந்தார். ஆனால் தான் நடிக்க வரும்போது ஒரு இயக்குநர் தன்னிடம் கேட்ட மோசமான விஷயம் குறித்து இப்போது பகிர்ந்துள்ளார். பாலிவுட்டில் பிரபலமாக சில விஷங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மூக்கு, வாய் என நடிகைகள் தங்களுடைய அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிந்த நேரம் அது. அந்த சமயம் தான் நடிகை சமீராவும் திரைப்படத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். திரைப்பட ஆடிஷனில் கலந்து கொண்டபோது பாலிவுட் இயக்குநர் ஒருவர் சமீராவை பார்வையால் துளைத்துள்ளார். நடிகை சமீராவின் மார்பை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அந்த இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு சமீரா மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: சிவபெருமானின் மகிமையை பெற எப்போது பூஜை, விரதம் கடைபிடிக்க வேண்டும்? முழுவிவரம்!

மார்பை பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்வதற்கு சமீரா மறுத்தாலும், அதை பெரியதாக காட்ட சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவருக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவுதான் சொல்லியும் கடவுள் அருளால் தான் அப்படி செய்யவில்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும் மார்பை பெரியதாக காட்ட தான் எடுத்த சிறு முயற்சிகளை கூட செய்யாமல் இருந்திருக்கலாம் என நினைப்பதாகவும் சமீரா பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்த விஷயத்தால் பாலிவுட்டின் மோசமான முகம் வெளிப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்டே என்பவரை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் ஏன் சிவப்பு புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்? அதை பரிசளித்தது யார் ? இதோ முழுபின்னணி..

Latest Videos

click me!