செம்பு (Copper) பாத்திரங்களில் உணவை எடுத்து கொள்வதாலும், நீரை அருந்துவதாலும் பல நன்மைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் இன்றும் பல வீடுகளில் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் செம்பு பாத்திரத்தை புதிது போல வைத்திருப்பது எப்போதும் கொஞ்சம் கடினமான டாஸ்க். இனி அப்படி தயங்க தேவையேயில்லை. சில பொருள்களை மட்டும் பயன்படுத்தி செம்பு பாத்திரங்களை எப்படி ஜொலிக்க விடலாம் என இங்கு காணலாம்.
டிப்ஸ் 1
நம் சமையலறையில் இருக்கும் எலுமிச்சை, உப்பு ஆகிய இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். கொஞ்சம் உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து பிரஷ் கொண்டு செம்பு பாத்திரங்களை தேய்த்துவிடுங்கள். அந்த பாத்திரத்தின் அடியில், விளிம்புகளில் கறை கொஞ்சம் அடர்த்தியாக படிந்து காணப்படும். அங்கெல்லாம் உப்பு, எலுமிச்சை பேஸ்ட்டை தேய்த்து ஒரு அரை மணிநேரம் ஊற விடுங்கள். அதன் பிறகு பிரஷால் நன்கு தேய்த்துவிடுங்கள். இதனை செய்து வர செம்பு பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை இல்லையென்றால் வினிகரை பயன்படுத்தலாம்.
டிப்ஸ் 3
கடையில் வாங்கும் கெட்ச் அப் செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்வதில் நல்ல பலனை தரும். இதில் உள்ள அமிலத்தன்மை செம்பு பாத்திரத்தின் மீது உள்ள அழுக்கை நீக்கும். பாத்திரத்தில் கொஞ்சம் கெட்ச் அப்பை தடவி சில நிமிடங்கள் ஊற வையுங்கள். மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு பாத்திரத்தை தேய்த்தால் கறைகள் அப்படியே நீங்கும். செம்பு பாத்திரத்தை தேய்த்து கழுவிய பின்னர் ஆலிவ் ஆயிலை துணியில் நனைத்து பாத்திரத்தின் மீது தடவி கொள்ளுங்கள். இப்படி செய்தால் பளபளக்கும் செம்பு பாத்திரத்தின் தோற்றம் உங்களை வியக்க வைக்கும்.
இதையும் படிங்க: இந்திய இளைஞர்களிடம் குறையும் உயிர்ச்சத்து.. அதிர வைக்கும் ஆய்வு ரிப்போர்ட் வெளியானது..!