விராட் கோலி மட்டுமில்ல ரன்பீரும் அப்படித்தான்! பிரபலங்கள் ஏன் சோசியல் மீடியால குழந்தைங்க முகத்தை மறைக்கிறாங்க?

நடிகைகள் தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடும்போது மறைத்துவிடுகிறார்கள். அது ஏன் என்பதை இங்கு காணலாம். 

உங்களுக்க ஞாபகம் இருக்கிறதா? கடந்தாண்டு ஜனவரியில் நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகள் வாமிகாவின் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது அனுஷ்கா சர்மா, விராட் கோலியின் தீவிர ரசிகர்கள் வாமிகாவின் படங்களை இணையத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பிரபலமாக இருக்கும் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தையின் முகத்தை பொது மக்களிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறார்கள்? குழந்தையின் முகத்தை இதயம் அல்லது குழந்தை எமோஜிகளால் பின்னால் மறைப்பதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.  

அனுஷ்கா ஷர்மா தன்னுடைய மகள் வாமிகாவின் புகைப்படங்களை ஏன் வெளியிடுவதில்ல என்பதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அதில், தங்கள் குழந்தைக்கு தனியுரிமையை (privacy) நாடுவதாகவும், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் இருந்து தனித்து அவள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவள் பெரியவள் ஆன பிறகு அவளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே உங்கள் ஆதரவு தேவை என நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார். 


அண்மையில் பெற்றோரான, நடிகர் ஆலியா மற்றும் ரன்பீரும் தங்கள் குழந்தையின் படத்தை வெளியிடவில்லை. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரன்பீர்,"ராஹாவுக்கு இரண்டு வயது ஆகும் வரை தயவுசெய்து எந்த புகைப்படமும் கிளிக் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்"என்றார். அதுமட்டுமின்றி தற்செயலாக எங்கள் குழந்தை ராஹா ஏதேனும் புகைப்படத்தில் வந்தால், தயவுசெய்து இதய எமோஜி போட்டு மறைத்துவிடுங்கள். அவள் முகத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், தன் மகள் வளர்ந்து அவள் விரும்புகிறாளா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளும் வரை புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பதுதான். 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடிகை சோனம் கபூர் தாயானார். அவர் தன் மகன் முகத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் சமூக ஊடகங்களில் மகனின் முகத்தை மறைத்து வெளியிடப்பட்ட படங்கள் மூலம் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் கூறிய அவர்,"தன் மகன் வளரும் வரை அவருடைய புகைப்படங்களை பகிர விரும்பவில்லை. உண்மையில், தன் மகன் தன்னைத்தானே தெரிந்து கொண்டு தீர்மானிக்கும் போது அந்த முடிவு எடுக்கப்படும்"என்றார். 

இதையும் படிங்க: உலக பணக்காரரின் மனைவியாக இருந்தும் கூச்சமே இல்லாமல் நீதா அம்பானி செய்த காரியம்... வியக்கும் பிரபலங்கள்

நடிகை பிரியங்கா சோப்ரா- ஜோன்ஸ் தம்பதியினர் தங்கள் குழந்தை மால்டியின் முகத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போது நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். "உங்கள் குழந்தை முகத்தை யாரும் பார்க்க வேண்டாம் என நீங்கள் விரும்பும்போது, ஏன் அதை மறைத்து​வெளியிடுகிறீர்கள் என எனக்குப் புரியவில்லை?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால் அதற்கான பதிலை அவர் தெரிவித்தாரோ இல்லையோ, தன் மகளின் முகத்தை பிறை நிலா போல ஒருமுறை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளிப்படுத்தினார். 

பிரபலங்களுக்கு இருக்கும் சிக்கலே தங்கள் அடையாளத்தின் சாயல் தங்கள் குழந்தைகளின் மேலும் விழுவதுதான். ஒருவேளை அவர்களுடய குழந்தைகள் பிரபலமாக இருப்பதை விரும்பாமல் சாதாரணமாக இருக்க கூட நினைக்கலாம். அதற்கு முன்பாக அவர்களை வெளிப்படுத்த முடியாது என்பது தான் பிரபலங்களின் கூற்றாக உள்ளது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் அதை விரும்பினால் அப்போது முகத்தை வெளிப்படையாக காட்டுவதாகவே எல்லா பிரபலங்களும் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது?

Latest Videos

click me!