அண்மையில் ராதிகா மெர்ச்சன்ட், ஆனந்த் அம்பானியின் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியின் மும்பை வீட்டில் நடந்த இந்நிகழ்வில் முன்னணி தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அசத்தலான உடைகளில் மிடுக்காக வந்திருந்தாலும், அம்பானி குடும்பத்தினர் தங்கள் தோற்றத்தால் கவனம் ஈர்த்தனர். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியோ ஒருபடி மேலே சென்று, தான் செய்த செயல் பலரின் இதயங்களை வென்றார்.