இந்த போராட்டம் முடிவுக்கு வராது - மயோசிடிஸ் நோய்க்கு பிறகு கடும் உடற்பயிற்சி, புது டயட்னு ஆளே மாறிபோன சமந்தா

First Published Jan 27, 2023, 12:36 PM IST

நடிகை சமந்தா தற்போது மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு தீவிர சிகிச்சை எடுத்து கொள்வதால், உணவு பழக்கத்தை மாற்றியுள்ளார். அது குறித்து இங்கு காணலாம். 

கடந்தாண்டு இறுதியில் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வருகிறார். தற்போது அந்த நோய் பாதிப்பு சற்று குறைந்துள்ளதை அடுத்து சில படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். 

சமீபத்தில் அவர் கலந்து கொண்ட சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில், அவரது அழகு குறைந்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறவே, அதற்கும் சமந்தா அன்புடன் பதிலளித்தார். அதன் பிறகு சிகிச்சைக்காக வெளிநாடு பயணம், தொடர் உடற்பயிற்சி, உணவு பழக்கங்களில் மாற்றம் என பல புதிய முடிவுகளை எடுத்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வெறித்தனமாக அவர் புல் அப் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தப் பதிவில், தான் கடுமையான டயட்டை (ஆட்டோ இம்யூன் டயட்.. ஆம் அப்படி ஒன்று உள்ளது) பின்பற்றுவதாகவும், அதனால் அவர் நிறைய கற்று கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். வலிமை என்பது எதை உண்கிறோம் என்பதில் இல்லை; நாம் எதை சிந்திக்கிறோம் என்பதில் தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சமந்தாவை பாதித்துள்ள அரிய வகை நோயை பொறுத்தவரை உணவுமுறையை மாற்றுவது அவசியம் என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பசையம், பால் பொருட்கள் - உங்கள் உடல் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அழற்சி உணவுகளை சாப்பிடுவது வீக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே நிபுணர்கள் சில கட்டங்களாக டயட் முறைகளுக்கு வழிகாட்டுவர். 

இதையும் படிங்க: அடடா! இப்படி செக்ஸ் வைத்தால் போதுமாம்... உடற்பயிற்சியே பண்ண தேவையில்லை...!

சமந்தா பாதிக்கப்பட்டுள்ள மயோசிடிஸ் நோய்க்கு எடுத்து கொள்ளும் டயட்டின், முதல் கட்டத்தில் நட்ஸ், முட்டை, பால், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகுத்தூள் ஆகிய காய்கறிகள் அடங்கும். இவற்றிற்கு பதிலாக, இறைச்சி மாதிரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். எலும்பு சூப், எலும்பு குழம்பு வகை, சில புளித்த உணவுகள் ஆகியவை உண்ண வேண்டும். இதற்கு உடல் பழகிய பிறகு முன்பு நீக்கப்பட்ட சில உணவுகள் உணவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். வாழ்க்கை முறை, தூக்கம், மன அழுத்த மேலாண்மை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றிலும் முழுமையான கவனம் செலுத்தப்படுகிறது.

டயட் மேற்கொள்ளும் முன்பு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைப்பது, ஒருவரின் உடல் பால் பொருட்களுக்கு எதிர்மறையாக செயல்படவில்லை என்றால், அதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. டயட் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது. ஒரு நிபுணரின் உதவியுடன் உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிப்பது நல்லது. சமந்தா தற்போது அவருக்கேற்ற டயட்டை பின்பற்றுகிறார். விரைவில் நலம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இதையும் படிங்க: 48 வயதிலும் அழகில் கவர்ச்சி காட்டும் கரீனா கபூரின் அக்கா.. தங்கையை மிஞ்சும் அழகுக்கு என்ன செய்யுறாங்க தெரியுமா

click me!