தேசிய நூலகம், கொல்கத்தா
அரிய புத்தகங்களுக்கு பெயர் பெற்ற கொல்கத்தா தேசிய நூலகம் திகில் கதைகளுக்கும் பெயர் பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்த நூலகம் இந்தியாவின் கவர்னர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. இங்கு வரும் மக்கள் இந்த இடத்தில் கண்ணுக்கு தெரியாத சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். மேலும், சிலர் இங்கு விசித்திரமான குரல்களைக் கேட்பதாகக் கூறுகின்றனர். அதனால்தான் பல செக்யூரிட்டிகள் இங்கே நைட் ஷிப்ட் செய்ய சம்மதிக்கவில்லை.
முகேஷ் மில்ஸ், மும்பை
மும்பையின் கொலாபா சாகர் அருகே உள்ள முகேஷ் மில்ஸ் திகில் கதைகளுக்கு பெயர் பெற்றது. பல திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த இடம் பேய் கதைகளுக்கு மிகவும் பிரபலமானது. நடிகை பிபாஷா போஸ் உட்பட பல நடிகர்கள் இந்த இடத்தில் வித்தியாசமான அனுபவங்களை சந்தித்துள்ளனர்.