தமிழ்நாட்டை பொறுத்த வரை கார சாரமான உணவுகள் தான் பெரும்பாலானவர்களுக்கு விருப்பம். அதிலும் மசாலா பொருள்கள் இல்லாத உணவு வகைகளை காண்பது அரிது. சின்ன பொரியல் முதல் பிரியாணி வரை மசாலா தான் முதன்மை தேவை. ஆனால் சில நேரங்களில் மசாலா பொருள்கள் அவசரத்திற்கு திறந்து பார்க்கும்போது கெட்டி பிடித்து காணப்படும். அது ஏன்? எப்படி நீண்ட காலம் மசாலா பொருள்களை சேமிக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம். மார்க்கெட்டில் பேக் செய்யப்பட்டு வாங்கும் மசாலா பொருட்களை அதில் குறிப்பிட்ட தேதி முடிந்த பிறகும் உபயோகம் செய்யலாம். அதில் தரம் குறையலாம், ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய தீங்கு ஏற்பட வாய்ப்பில்லை.
எப்போது மசாலா பொருள்களை தூக்கி எறிய வேண்டும்?
நாம் சேமித்து வைத்துள்ள மசாலாப் பொருட்கள் வழக்கத்திற்கு மாறான வாசனை வீசாமல் மாறினால் அதை பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருள்களை சேமித்துள்ள டப்பாக்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் பூச்சிகள் வந்தால் உடனே அதை அப்புறப்படுத்துங்கள். மசாலாக்களில் ஈரமோ, துர்நாற்றமோ வந்தாலும் அதன் காலம் முடிந்து விட்டது என புரிந்து கொள்ளலாம்.
மசாலா பொருள்களை சேமிக்க டிப்ஸ் 1...
மசாலா பொருட்களின் அசல் தரம் மாறாமல் இருக்க நீங்கள் விரும்பினால், கடையில் இருந்து வாங்கி வந்த பாக்கெட் அல்லது பெட்டியில் மசாலாவை சேமிக்க வேண்டும். மசாலா பொருள்களை காற்றுபுகாமல் வைப்பதற்கு ஏற்ற பிளாஸ்டிக் கிளிப்புகளை (Plastic Food Snack Bag Pouch Clip) சூப்பர் மார்க்கெட்டிலும், ஆன்லைனிலும் கூட பெறலாம்.
டிப்ஸ் 2..
மசாலா பொருட்களை மாதம் ஒருமுறை வாங்கி பயன்படுத்தும் போது அதனுடைய தரம், வாசனை போன்றவற்றை தக்க வைக்கலாம். மொத்தமாக வாங்கி வைக்கும்போது தரம் மிக்கதாக இருக்காது.
டிப்ஸ் 3
காற்றுபுகாத ஏர் டைட் கன்டெய்னர்கள், கண்ணாடி பாட்டில்களில் சேமிக்க வேண்டும். சமைக்கும்போது ஈரக் கைகளால் அவற்றை கையாளாமல் இருந்தால் போதும்.
டிப்ஸ் 4
மசாலா பொருள்களை ஜன்னல் ஓரங்களிலோ, வெளிச்சம் படும் இடங்களிலோ, சூரிய ஒளிபடுமாறோ வைக்கக் கூடாது. மசாலா டப்பாக்களை வெளிச்சம் குறைவாகப்படும் இடங்களில், உலர்ந்த பகுதியில் வைத்தல் முக்கியம்.
காலக்கெடு..
அந்த நான்கு டிப்ஸுகளில் உங்களுக்கு நாம் பயன்படுத்தும் மசாலா, மூலிகை சார்ந்த பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிட்டு சொல்ல முடியாது. கைபடாமல் பயன்படுத்தினால் நீண்டகாலம் வரும். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் மசாலா பொருட்களில் ‘எக்ஸ்பைரி டேட்’ கணக்குபடி உபயோகம் செய்ய வேண்டும். அந்த தேதிக்குள் மேல் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை பயன்படுத்துங்கள். அதன் பிறகு அவை பயன்படுத்த தகுதியவற்றை. அந்த தேதிக்கு பிறகு அதன் சுவை மாறும். அந்த காலக்கெடுக்குள் பயன்படுத்தாவிட்டால் தரமும் குறையலாம். ஆகவே குறிப்பிட்ட தேதிக்குள் அதனை உபயோகம் செய்வது நல்லது.