மங்கிய வெள்ளை ஆடைகள் பளிச்சினு மாறணுமா? துவைக்கும்போது இந்த மாத்திரை பயன்படுத்தினால் கறைகளே இருக்காது

First Published Jan 23, 2023, 6:10 PM IST

உங்கள் வாஷிங் மிஷினில் ஆஸ்பிரின் மாத்திரையை சேர்த்து துவைக்கும்போது ஏற்படும் அதிசய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம். 

இந்தியாவில் பெரும்பாலான இல்லங்களில் பெண்களை துணிகளை துவைத்து சுத்தப்படுத்துகின்றனர். அன்றாட வேலைகளுக்கு நடுவே துணிகளை துவைப்பது பெரும் சிரமமாக இருக்கும். வேலைக்கு சென்று கொண்டே துணி துவைக்கும் நபர்களும் உள்ளனர். அவர்களின் வேலையை எளிமையாக்குவது வாஷிங் மிஷின் தான். ஆனால் அதையும் முறையாக சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வாஷிங் மிஷினில் உள்ள அழுக்குகள் துணிகளை கறைகளோடு அசுத்தமாகிவிடும். 

மாதத்திற்கு ஒருமுறையாவது வாஷிங் மிஷின் நடுப்பகுதியில் உள்ள ஸ்க்ரு போன்ற கனமாக வளையத்தை கழற்றி அதிலுள்ள அழுக்குகளை நீக்குங்கள். அப்போதுதான் ஆடைகளில் கறைபடியாது. மேலும் வெள்ளை ஆடைகளை துவைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் மட்டும் தான் எளிதில் கறைகளை அகற்ற முடியாது. 

நவீன சலவை இயந்திரங்களில் சிறந்த சலவை சுழற்சிகளை கொண்டிருந்தாலும் வெள்ளை உடைகள் வெண்மையாகவே இருப்பதை உறுதி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதிர்ஷ்டவசமாக, ஆஸ்பிரின் மாத்திரை நம்மிடம் உள்ளது என்றே சொல்லலாம். என்ன பொருள்களை பயன்படுத்தினாலும் வெள்ளை ஆடைகளில் உள்ள சாம்பல் நிற புள்ளிகள், அக்குள் பகுதியில் மஞ்சள் கறை மறைவதில்லை. இதை ஆஸ்பிரின் மாத்திரைகளை பயன்படுத்தி நீக்கலாம். 

எப்படி துவைக்கலாம்? 

முதலில் 325 மில்லிகிராமில் ஐந்து ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்து கொள்ளுங்கள். இதை சூடான நீர் அல்லது குளிர்ந்த நீரில் கரைத்து கொள்ளுங்கள். இந்த நீரை அழுக்கான வெள்ளை ஆடைகளுடன் ஊற வைக்கவும். எட்டு மணி நேரம் ஊற வேண்டும். நீங்கள் சலவை இயந்திரத்தில் கூட சில ஆஸ்பிரின்களைச் சேர்க்கலாம். ஆனால் ஊறவைக்கும் முறை நன்றாக செயல்படுகிறது. துணிகளை ஊற வைத்த பிறகு, வழக்கம் போல் வாஷிங் மிஷினில் துணிகளை துவைக்கலாம். வெள்ளை ஆடைகள் பளிச்சென மின்னும். எளிய முறையை பின்பற்றி ஆடைகளை சுத்தம் செய்யுங்கள். 

click me!