Republic Day wishes 2023: தேசப்பற்றை தூண்டும் குடியரசு தின வாழ்த்துகள்! நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்..

Published : Jan 26, 2023, 10:31 AM IST

Republic Day 2023: குடியரசு தின விழா அன்று அனுப்ப வேண்டிய வாழ்த்துகளை இங்கு காணலாம். 

PREV
15
Republic Day wishes 2023: தேசப்பற்றை தூண்டும் குடியரசு தின  வாழ்த்துகள்! நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்..

74வது குடியரசு தினத்தை இந்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி அன்று இந்தியா அனுசரிக்கிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நம் தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் கிடைத்தது. இந்த நாளில் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் தேசிய கொடியை ஏற்றவுள்ளார். சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிஸி அழைக்கப்பட்டுள்ளார். இந்தத் தினத்தின் கருவாக 'பெண் சக்தி' அறிவிக்கப்பட்டுள்ளது. 

25

இந்த விழாவில் முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பு, கண்களை கவரும் கலை நிகழ்ச்சிகள், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வரும் அலங்கார ஊர்திகள் உலா ஆகியவை நடைபெறும். இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசிக்க படையெடுப்பார்கள். நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் இந்த நிகழ்வை மக்கள் பார்த்து களிப்படைவார்கள். 

 

35

குடியரசு தின வாழ்த்துகள் 2023 

1) நம் தேசம் அமைதியும், அன்பும் கொண்டு விளங்க சகோதர்களாய் இணைவோம். இனிய குடியரசு தின வாழ்த்துகள். 

2) பிரிவினைகள் இன்றி இந்தியர்களாய் இணைவோம். குடியரசு தின வாழ்த்துகளுடன் சகோதரத்துவத்தை நினைவுகூருவோம்.

45

குடியரசு தின வாழ்த்துகள் 2023 

3). அனைவரும் சமம் என உணர்த்தும் இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்திய நாள் இன்று. சகோதர்களாய் இணைவோம். குடியரசு தின வாழ்த்துகள். 

4). தேசத்தை எக்காரணம் கொண்டு விட்டுக் கொடுக்காத நாட்டுப்பற்று தீயை நெஞ்சில் ஏந்தி கொள்வோ. குடியரசு தின வாழ்த்துகள். 

 

55

குடியரசு தின வாழ்த்துகள் 2023 

5). வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் இந்திய குடிமக்கள் நாம் என்பதை கனவிலும் மறக்கக் கூடாது நண்பா! குடியரசு தின வாழ்த்துகள். 

6). நாட்டை முன்னேற்றத் துடிக்கும் இளைஞர்களே... உத்வேகம் கொள்ளுங்கள். நாட்டிற்கு உழைப்பை கொடுப்போம். குடியரசு தின வாழ்த்துகள். 

7). அனைவரும் ஒற்றுமையாய் இருந்து தேசத்தின் நம்பிக்கை கொடியை மிளிர செய்வோம். குடியரசு தின வாழ்த்துகள். 

click me!

Recommended Stories