டிப்ஸ் 4:
கிச்சன் மேடையை சுற்றி எப்போதும், கரப்பான் பூச்சி, பல்லிகள் போன்றவை உலா வந்து கொண்டிருந்தால், முதலில் இரண்டு ஊதுபத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு கற்பூரத்தை உடைத்து சேருங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து விடுங்கள். இதை வடிகட்டி ஒரு காலியான ஸ்பிரே பாட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்பிரேயை கொண்டு நீங்கள் கிச்சன் மேடையை துடைத்தால், இதன் வாசம் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவற்றை வரவே விடாது. அத்துடன் சமையல் அறை தெய்வீகமாக இருக்கும்.