Kitchen tips: சர்க்கரையில் எறும்பு வராமல், ஊறுகாய் கெட்டுப்போகாமல் பாதுகாக்க..அட்டகாசமான கிச்சன் டிப்ஸ்

First Published Aug 9, 2022, 11:43 AM IST

Useful kitchen tips: கிட்சனில் உள்ள பொருட்கள் மற்றும் உணவை எறும்பு வராமல், கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

சமையல் அறைதான் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சி, குறிப்பாக, காபி, டீ போட்டு குடிப்பது. அங்கு துவங்கும் இல்லத்தரசிகளின் பயணம் இரவு உறங்க செல்வது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 

அப்படியாக, இல்லத்தரசிகளின் கோவில் என்று அழைக்கப்படும் சமையலறையில் இருக்கும் பொருட்கள் மற்றும் உணவை புதியதாக வைத்திருப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 மேலும் படிக்க....Kidney: சிறுநீரகத்தில் நச்சுக்கள் இல்லாமல் சுத்திகரிக்கும் 3 சூப்பர் பானங்கள்..உங்கள் டயட் லிஸ்டில் இருக்கா..?

பன்னீர் சேமிக்க

பன்னீரை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். இது பன்னீர் புளிப்பு அல்லது கசப்பாக மாறுவதைத் தடுக்கும், மேலும் மென்மையாகவும் இருக்கும்.

ஊறுகாய் கெட்டுப்போகாமல் தடுக்க

மழைக்காலத்தில் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே, அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து, அவற்றின் மேலே எப்போதும் எண்ணெய் அடுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஊறுகாய் கெட்டுப் போவதைத் தடுக்கும்.

எறும்பு தொல்லையிலிருந்து சர்க்கரையைத் தடுக்க

சர்க்கரை வைத்திருக்கும் ஜாடியில் 2-3 கிராம்புகளை வைக்கவும். கிராம்புகளின் வாசனையினால் எறும்புகள் கிட்ட வரவே வராது. 

அரிசியைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டியவை:

நீங்கள் பழைய அரிசியை வாங்க விரும்பினால், அதை புதிய அரிசியிலிருந்து வேறுபடுத்துவதற்கான சிறந்த வழி, உங்கள் பற்களுக்கு இடையில் சிறிது அரிசியைப் போடுவது, அரிசி ஒட்டிக்கொண்டால் அது புதியது, இல்லையெனில் அரிசி பழையது.

 மேலும் படிக்க....Kidney: சிறுநீரகத்தில் நச்சுக்கள் இல்லாமல் சுத்திகரிக்கும் 3 சூப்பர் பானங்கள்..உங்கள் டயட் லிஸ்டில் இருக்கா..?

அரிசியை வேக வைக்க:

ரேஷன் கடையில் வாங்கிய அரிசி, பருப்பு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். விக்கிற விலை வாசியில் கேஸ் அடுப்பின் சிலிண்டர் சீக்கிரம் காலியாகும். எனவே, இனிமேல் அரிசி, பருப்பு சீக்கிரமாக வேக அதில் சிறிய துண்டு கொட்டாங்குச்சி ஓட்டை  நாரை எடுத்து கழுவி போட்டு வேக வைக்கவேண்டும்.

முட்டைகள் கெட்டு விட்டதா..? சரிபார்க்க 

முட்டைகள் கெட்டு விட்டதா என்பதை கண்டுபிடிக்க, அவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரில் வைக்கவும். முட்டைகள் பாத்திரத்தில் கீழே தங்கினால், அவை புதியவை. அவை நின்றால், முட்டைகள் 2-3 வாரங்கள் பழமையானவை, ஆனால்,  அவை மிதந்தால், முட்டைகள் மிகவும் பழையவை என்று அர்த்தம், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

 மேலும் படிக்க....Kidney: சிறுநீரகத்தில் நச்சுக்கள் இல்லாமல் சுத்திகரிக்கும் 3 சூப்பர் பானங்கள்..உங்கள் டயட் லிஸ்டில் இருக்கா..?

click me!