Kidney: சிறுநீரகத்தில் நச்சுக்கள் இல்லாமல் சுத்திகரிக்கும் 3 சூப்பர் பானங்கள்..உங்கள் டயட் லிஸ்டில் இருக்கா..?

First Published Aug 9, 2022, 10:47 AM IST

Kidney Detox Drinks: உங்கள் சிறுநீரகத்தை எவ்வாறு நச்சுக்கள் இல்லாமல் சுத்திகரிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

Kidney Detox Drinks:

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம். இல்லையென்றால் சிறுநீரக கற்கள் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும். மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் உள்ளவர்களிடம் இந்தப் பிரச்னை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் மட்டுமே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுநீரகத்தை நச்சு நீக்குவதும் மிக அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சில பானங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எனவே, உங்கள் சிறுநீரகத்தை எப்படி நச்சு நீக்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

 மேலும் படிக்க...Vastu Tips: வீட்டில் பூஜை அறை எந்த திசையில் வைத்தால் பலன் உண்டு..வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன..?

Kidney Detox Drinks:

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

சோர்வு, அசதி, மூச்சு வாங்குதல், ரத்த சோகை, பசியின்மை, இருதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பாதிப்பின் அறிகுறி ஆகும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

பருப்பு வகை காய்கறிகளை சாப்பிடுவதும் கற்களில் நன்மை பயக்கும். பழங்கள், கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாகற்காய், வெண்டைக்காய், பட்டாணி, ஆப்பிள், அஸ்பாரகஸ், கீரை மற்றும் பேரிக்காய் போன்றவை சிறுநீரகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 

Kidney Detox Drinks:

ஆப்பிள்  சைடர் வினிகர்:

ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை கரைக்கவும், நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. இதற்காக நீங்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து பருகலாம். 

 மேலும் படிக்க...Vastu Tips: வீட்டில் பூஜை அறை எந்த திசையில் வைத்தால் பலன் உண்டு..வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன..?

Kidney Detox Drinks:

மாதுளை ஜூஸ்

மாதுளம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் பிரச்சனையை நீக்கும். அதுமட்டுமின்றி இதில் உள்ள பண்புகள் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. இதை உட்கொள்ள, நீங்கள் தினமும் புதிய மாதுளை சாற்றை உட்கொள்ளலாம்.

Kidney Detox Drinks:

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் ஜூஸ் மிகவும் நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல் பீடைனை கொண்டுள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தினமும் பீட்ரூட் ஜூஸை உட்கொண்டு வந்தால், சிறுநீரகத்தை நச்சுத்தன்மையுடன் சேர்த்து, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படுத்தாது.

 மேலும் படிக்க...Vastu Tips: வீட்டில் பூஜை அறை எந்த திசையில் வைத்தால் பலன் உண்டு..வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன..?

click me!