Vastu Tips: வீட்டில் பூஜை அறை எந்த திசையில் வைத்தால் பலன் உண்டு..வாஸ்து, சாஸ்திரம் சொல்வது என்ன..?

First Published Aug 9, 2022, 9:52 AM IST

Poojai Arai Vastu Tips: வாழ்வில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வீட்டின் பூஜை அறையினை நம்முடைய வசதிக்கு ஏற்ப வாஸ்து, சாஸ்திரம் சொல்வது போல் பார்த்து கொள்ளுங்கள். 

Vastu Tips

நாம் காலை எழுந்ததும், இறைவனை முதலில் வழிபட்டு அன்றாட பணிகளை தொடர்வது அந்த நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சியாகவும், பாஸிட்டிவாகவும் இருக்கும். அவ்வாறு வீட்டில் செல்வம் பெருகி, நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, நேர்மறை ஆற்றலைகொடுக்கும் பூஜை அறையை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது நல்லது என்று பார்ப்போம்.

 மேலும் படிக்க....Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

Vastu Tips

நீங்கள் புது வீடு வாங்கி குடி போனாலும் சரி அல்லது புதிய வீடு கட்டும் போதும் மற்றும் வாடகை வீட்டிற்கு செல்லும் போதும், நம்முடைய வசதிக்கு ஏற்ப வீட்டின் பூஜை அறையினை வாஸ்து, சாஸ்திரம் சொல்வது போல் பார்த்து கொள்ளுங்கள். 

8 Vastu Tips To Attract More Wealth To Your Home

 
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று கூறப்படும், இறைவனை நம் வீடுகளில் வைத்து வழிபடுவதற்கு, தனி வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி இருக்கும்படி சுவாமிப் படங்கள் இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும். 

பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். அதேபோன்று, தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும். 

வீட்டின் ஈசான்ய மூலையில் பூஜை அறை இருந்தால் வீசும் காற்றில் பூஜை அறையின் சாம்பிராணி மற்றும் ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, வீடு முழுவதையும் தெய்வ சாந்நித்யம் நிறைந்ததாகச் செய்துவிடும்.

 மேலும் படிக்க....Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

Poojai Arai Vastu Tips:

ஒருவேளை, ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கே பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம். இப்படி அமைத்து கொண்டால், உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். மேலும், பூஜை அறையைப் புனிதமான இடமாக பாவிக்க வேண்டுமே தவிர, தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வத்தின் சக்தியை குறைத்துவிடும்.

 மேலும் படிக்க....Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

click me!