Gardening Tips: உங்க பால்கனி தோட்டத்தை சூப்பரா மாத்தணுமா? சமையலறை கழிவுகளை குப்பைனு தூக்கி போடாதீங்க. சமையலறை கழிவுகளை சத்தான உரமாக்க 5 எளிய வழிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
நகரங்களில் பால்கனி தோட்டங்கள் இப்போ ரொம்பவே பிரபலம். சின்ன இடத்தில்கூட பசுமையான சூழலை இது கொடுக்குது. இந்த தோட்டங்களை இன்னும் சிறப்பாக்க, நாம தூக்கிப்போடுற சமையலறை கழிவுகளே போதும். குப்பைக்குப் போகும் இந்த பொருட்களை வெச்சு, செடிகளுக்கு உரம் தயாரிக்கலாம், வீட்டுக்கழிவுகளையும் குறைக்கலாம்.
26
கம்போஸ்டிங் ஒரு சிறந்த வழி
சமையலறை கழிவுகளை உரமாக்க கம்போஸ்டிங் ஒரு சிறந்த வழி. மண்புழு உரம் அல்லது போகாஷி முறைகளை முயற்சி செய்யலாம். வெர்மி கம்போஸ்டிங்கில், சிவப்பு மண்புழுக்கள் கழிவுகளை 'மண்புழு எச்சங்களாக' மாற்றி, சத்தான மண்ணையும் திரவ உரத்தையும் கொடுக்கும். போகாஷி முறையில், ஒரு மூடிய டப்பாவில் உணவுக்கழிவுகளை புளிக்க வைத்து உரம் தயாரிக்கலாம். துர்நாற்றம் வராமல் இருக்க, உரக்குவியலை அடிக்கடி கிளறிவிடுவது முக்கியம்.
36
ஃப்ரெஷ்ஷான கீரைகள்
ஆச்சரியப்படாதீங்க! லெட்யூஸ், செலரி, வெங்காயத்தாள் ஆகியவற்றின் வேர்ப்பகுதியை வெச்சே புதுசா செடிகளை வளர்க்கலாம். வேர்ப்பகுதியை ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வையுங்க. சில நாட்களில் புது தளிர்கள் வரும். நல்லா வேர் விட்டதும், அதை எடுத்து தொட்டியில் நட்டுடுங்க. கடையில் வாங்காமலேயே உங்களுக்கு ஃப்ரெஷ்ஷான கீரைகள் தொடர்ந்து கிடைக்கும்.
சில கழிவுகளை நீங்க நேரடியாவே தொட்டி மண்ணுல கலக்கலாம். உதாரணமா, முட்டை ஓடுகளில் கால்சியம் கார்பனேட் அதிகமா இருக்கு. இதை பொடி செஞ்சு மண்ணுல கலந்தா, தக்காளி, மிளகாய் செடிகளில் வரும் 'blossom end rot' நோயைத் தடுக்கலாம். பயன்படுத்திய காபித் தூள், நைட்ரஜன் சத்துக்கான சிறந்த மூலம். இது மண்ணின் தன்மையை மேம்படுத்தும்.
56
மினி கம்போஸ்ட் நிலையம்
உங்ககிட்ட தனியா கம்போஸ்ட் தொட்டி இல்லையா? கவலையே வேண்டாம். சமையலறை கழிவுகளை செடி இருக்கும் தொட்டியிலேயே நேரடியாக புதைக்கலாம். இது ஒரு மினி கம்போஸ்ட் நிலையம் மாதிரி செயல்படும். மண்ணில் உள்ள மண்புழுக்களும் நுண்ணுயிரிகளும் கழிவுகளை மக்கச் செய்து, செடிகளுக்கு அங்கேயே சத்துக்களைக் கொடுக்கும். இதை செய்யும்போது, பூச்சிகளைத் தடுக்க கழிவுகளை மண்ணால் நன்கு மூட வேண்டும்.
66
அமோக விளைச்சல்
இப்போ அடுத்த கட்டத்துக்குத் தயாரா? இந்த முறைகளை நீங்க செயல்படுத்தும்போது, உங்க செடிகளுக்கும் பால்கனி சூழலுக்கும் எந்த முறை சிறப்பா வேலை செய்யுதுன்னு கவனிங்க. வெவ்வேறு கழிவுகளையும், கம்போஸ்டிங் முறைகளையும் முயற்சி செய்து பாருங்க. இது உங்க தோட்டக்கலை அனுபவத்தை இன்னும் சிறப்பாக்கி, அமோக விளைச்சலுக்கு வழிவகுக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.