தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியம். அதனால் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு தண்ணீர் குடிப்பது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? உண்மை சொல்ல வேண்டுமென்றால், நம் உடல் தேவைகளுக்கு ஏற்றவாறு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை சிறுநீர் நிறத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி தாகம் எடுத்தால்?
உங்களுக்கு அடிக்கடி அதிகமாக தாகம் எடுத்தால், அது உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக குறிக்கிறது. இது உடலுக்கு ஆபத்தானது. தொடர்ந்து அதிகமாக தாகம் எடுப்பது நல்ல அறிகுறி இல்லை. உங்களுக்கு நாள் முழுவதும் தாகம் எடுத்தால், அது ஆபத்தான நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.