ரம்ஜான் 2025 எப்போது? இந்தியாவில் ரமலான் மாதம் எப்போது தொடங்கும்?

Published : Feb 27, 2025, 08:09 PM IST

Ramadan 2025 : முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் பிறை நிலைவோடு பார்ப்பதோடு ஆரம்பமாகிறது.

PREV
14
ரம்ஜான் 2025 எப்போது? இந்தியாவில் ரமலான் மாதம் எப்போது தொடங்கும்?
ரம்ஜான் 2025 எப்போது? இந்தியாவில் ரமலான் மாதம் எப்போது தொடங்கும்?

ரமலான் மாதம் இஸ்லாத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. இது இஸ்லாமிய நாட்காட்டியின் படி, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் 9வது மாதம் ஆகும். இந்த ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது என்பது இஸ்லாம் மதத்தில் ஐந்து முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கண்டுபிடிக்கிறது. ரமலான் மாதத்தின் கடைசி நாளில்தான் 'ஈத்' என்னும் 'ரம்ஜான்' பண்டிகை கொண்டாடப்படுகிறது.

24
ரமலான் நோன்பு அம்சம்:

ரமலான் மாதத்தில் சூரிய உதயம் தொடங்கியது முதல் அஸ்தமாகும் வரை தண்ணீர், உணவு என ஏதும் சாப்பிடாமல் இருப்பதும், பிற பாவ செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதும்தான் ரமலான் நோன்பின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஆனால், மாலை வேளையில் மட்டும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து அந்நாளின் நோன்பை நிறைவு செய்வார்கள். பிறகு தங்கள் குடும்பத்தினருடன் வழக்கமான உணவுகளை சாப்பிடுவார்கள். முக்கியமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் ரமலான் நோன்பு இருக்கமாட்டார்கள்.

இதையும் படிங்க:  ரமலான், மகாசிவராத்திரி, ஹோலிக்கு கடும் கட்டுப்பாடு! யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!

34
இந்தியாவில் ரமலான் 2025 நோன்பு எப்போது?

இந்தியாவில் ரமலான் நோன்பு சவுதி அரேபியாவில் அதாவது மெக்காவில் சந்திரனை பார்ப்பதை பொறுத்து தான் தொடங்கும். சவுதி அரேபியாவில் சந்திரன் தெரிந்த மறுநாளே இந்தியாவில் முதல் நோன்பு அனுசரிக்கப்படும். அந்த வகையில், இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அதாவது நாளை ரமலான் நோன்பு ஆரம்பமாக வேண்டும். ஆனால் பிற நாடுகளில் பிறையானது மார்ச் 1ஆம் தேதி தான் தெரிகிறது என்பதால், அந்நாளில் தான் ரமலான் நோன்பு தொடங்கப்படுகிறது. ஒருவேளை அந்நாளிலும் பிறை தெரியவில்லை என்றால் மார்ச் 2ஆம் தேதி தான் ரமலான் நோன்பு ஆரம்பமாகும்.

இதையும் படிங்க: தொடங்குகிறது ரமலான் நோன்பு.! இஸ்லாமியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

44
ரம்ஜான் 2025 எப்போது?

இந்த ஆண்டு ரம்ஜான் தேதி குறித்து குழப்பம் இருக்கிறது. ஏனெனில் பிறையானது பிப்ரவரி 28ஆம் தேதி தெரியும் என்று நம்பப்படுகிறது. பிறகுதான் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ரமலான் நோன்பு ஆரம்பம் ஆகும். ஒருவேளை மார்ச் ஒன்றாம் தேதி சந்திரன் தெரிந்தால் மார்ச் இரண்டாம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படும். எனவே இந்த 2025 ஆண்டு ரம்ஜான் பண்டிகையானது மார்ச் 29 அல்லது 30 ஆம் தேதி கொண்டாடப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories