
குழந்தைகளின் இயல்பு பெற்றோருடன் தொடர்புடையது அவர்கள் என்ன செய்வார்கள், எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள் என அனைத்தும் பெற்றோரின் இயல்புடன் தொடர்புடையது. இதுபோன்ற சூழ்நிலையில் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே அவர்களின் வேலையில் சிறப்பு கவனம் செலுத்துவது மிக முக்கியம். ஆனால், அதற்கு முன்பாக ஒவ்வொரு பெற்றோரும் தங்களது இயல்பு மற்றும் பழக்க வழக்கங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் அவர்கள் அதை நீண்ட காலமாக பின்பற்றுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பெற்றோரிடம் இருக்கும் சில பழக்கவழக்கங்கள் குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது அதை என்னென்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகள் முன்னிலையில் யாரிடமும் சத்தமாக பேசாதீர்கள் இப்படி நீங்கள் செய்வதன் மூலம், அவர்கள் அதை சாதாரணமாக உணர தொடங்குவார்கள், பிறகு அவர்கள் சத்தமாக பேசத் தொடங்குவார்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அதை பழகி, பின் அது அவர்களின் இயல்பாக மாறிவிடும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குரலை சமநிலையில் வைத்திருப்பதிலும், கோபத்திலும் கூட சத்தமாக பேசாமல் இருப்பதிலும், நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து தான் அதை கற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், பெற்றோர்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினால் குழந்தைகளும் அதையே கற்றுக் கொண்டு, அதை பயன்படுத்த தொடங்குகிறார்கள். எனவே பெற்றோர்கள் குறிப்பாக குழந்தைகள் முன்னிலையில் ஒருபோதும் கெட்ட வார்த்தைகளையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முன் எப்போதும் அன்பின் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். இது குழந்தைகையும் இப்படிதான் நடந்து கொள்ள வைக்கும்.
இதையும் படிங்க: பெற்றோரே இந்த 3 விஷயத்தில் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீங்க.. உங்கள வெறுப்பாங்க!!
குழந்தைகள் வற்புறுத்தி அல்லது அடம்பிடித்து எதையாவது கேட்டால் உடனே அதை வாங்கி கொடுக்காதீர்கள். அது நல்ல பழக்கம் அல்ல. ஒருவேளை நீங்கள் வாங்கி கொடுத்தால் காலப்போக்கில் அந்த பழக்கத்தால் அவர்கள் ரொம்பவே பிடிவாதமாகிவிடுவார்கள். இந்த பழக்கம் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அவர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் பகிர்ந்து கொள்ளும் உணர்வு அவரிடம் வளராது. எனவே உங்கள் குழந்தைக்கு இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தி இதற்காக உங்கள் பழக்கங்களை மேம்படுத்துங்கள்.
இதையும் படிங்க: ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்.. பின்விளைவுகள் பயங்கரம்
பணத்தை வீணாக்குவது என்பது மிக மோசமான பழக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இந்த பழக்கம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைக்கும் தீங்கு தான் விளைவிக்கும் தெரியுமா? ஆம், உண்மையில் பணத்தை வின் செலவுகளுக்கு செலவழிப்பது நல்லதல்ல. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியத்துவத்தை குறித்து சொல்லி கொடுங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் சொல்லுங்கள். அதாவது பணத்தை எப்படி எங்கே செலவிட வேண்டும், எங்கே செலவிடக்கூடாது என்பது அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இது தவிர, குழந்தைகளுக்கு பண மேலாண்மையை பற்றி கற்றுக் கொடுக்கவும்.