என்ன பண்ணாலும் தாடி வளரலயா? அடர்த்தியான, கருமையான தாடிக்கு இதை பண்ணுங்க

Published : Sep 30, 2024, 11:11 PM IST

காலேஜ் முடிக்குற கட்டம் வந்துடுச்சி, இன்னமும் தாடி வளரலையா? கவலைய விடுங்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தி பாருங்க தாடி அடர்த்தியா வளரும்.

PREV
16
என்ன பண்ணாலும் தாடி வளரலயா? அடர்த்தியான, கருமையான தாடிக்கு இதை பண்ணுங்க
Beard

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆடை, அணிகலன் எப்படி முக்கியமோ அதே போன்று ஆண்களுக்கு தாடி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் வளர் இளம் பருவ ஆண்களுக்கு தாடி மீது அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தாடி வளர்வது தாமதமானால் மனதளவில் தன்னம்பிக்கையற்ற சூழலை உண்டாக்கும் அளவிற்கு அது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இதிலும் சிலருக்கு முகத்தில் அடர்த்தியா தாடி வளராமல் ஆங்காங்கே தாடி இருப்பது அவர்களின் அழகை கெடுப்பதாக அமைகிறது.

26
தாடி வளர என்ன தான் செய்ய வேண்டும்?


தூசி மற்றும் அழுக்கின் காரணமாக முடியின் வளர்ச்சி தடைபடலாம். எனவே முகத்தை எப்போதும் சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புசத்து, வைட்டமின் பி, டி, இ, உள்ளிட்டவை நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவை தாடி வளர்வதை ஊக்கப்படுத்தும்.

36
Beard

முகத்தில் அவ்வபோது மசாஜ் செய்வதால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும். எனவே தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தில் அவ்வபோது மசாஜ் செய்வது தாடி வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். எலுமிச்சை மற்றும் லவங்கப்பட்டையின் கலவைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். 

46
Beard

அடிக்கடி தாடியை வெட்டவோ, ஷேவ் செய்யவோக் கூடாது. 4 முதல் 6 வாரங்களுக்கு தாடியை வளரவிட வேண்டும். முறையான தூக்கமின்மை தாடி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். மாய்ஸ்ட்டரைஸ் பயன்படுத்துவதால் தாடி மென்மையாக வளர உதவி செய்யும். குறிப்பாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மாய்ட்டரைஸ் பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு.

56
Beard

தலைமுடியின் மிருதுவான தன்மைக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது போன்று தாடிக்கும் ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தலாம். ஆனால் அவை கெமிக்கல் இல்லாதவையாக இருக்க வேண்டும். 

66
தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மை


தாடி வளர்ப்பதால் ஆண்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் முக துவாரங்கள் வழியாக அழுக்கு படிவதையும், சரும பாதிப்புகளையும் தடுக்கும், வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தை பாதுகாக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories