
துணி துவைப்பது என்பது வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் ஒரு பணியாகும். இது போன்ற சூழ்நிலையில் பெண்கள் தங்களது வேலையை எளிதாக வாஷிங் மெஷின் பயன்படுத்துகிறார்கள். வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பதினால் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. மேலும் இது துணிகளை மிகவும் எளிதாக துவைத்து விடுகிறது. இருப்பினும் தற்போது சந்தையில் வாஷிங் மெஷின் பல வகைகளில் கிடைக்கின்றன. அதாவது, டாப் லோட் அல்லது ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின்கள் உள்ளன. இவை இரண்டும் மிகவும் பிரபலமானவை. மேலும் இந்த இரண்டு வாஷிங்மெஷினிலும் அவற்றின் நன்மை மற்றும் தீமைகளும் உள்ளன. பெண்கள் வாஷிங் மெஷின் வாங்க செல்லும்போது இவை இரண்டில் துணித்து வைப்பதற்கு எது சிறந்தது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். எனவே எந்த வகையான வாஷிங் மெஷின் சிறந்தது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
டவுன்லோட் வாஷிங் மெஷின் பலரும் விரும்புகிறார்கள். காரணம் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும் மற்றும் விலையும் கம்மி என்பதால் தான். டாப் லோட் வாஷிங் மெஷின் ஆனது மேலே திறந்து மூடும் படி இருக்கும். முக்கியமாக இந்த மெஷினை பயன்படுத்தும் போது குறைந்த நீர் மட்டுமே செலவாகின்றது. மேலும் துணி துவைக்கும் சுழற்சியும் மிக வேகமாக நடைபெறுகிறது. ஆனால், டாப் லோட் வாஷிங் மெஷின் குறை என்னவென்றால் சில சமயங்களில் இது துணிகளை கிழித்து விடும் அல்லது சுருக்கி விடலாம்.
இதையும் படிங்க: வாஷிங் மிஷினில் மறந்தும் இந்த '6' துணிகளை போடாதீங்க!! துணிக்கு தான் சேதாரம்
ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷினை விட ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷினானது அதிக திறனை கொண்டது. இந்த மெஷின் துணிகளை மிகவும் நன்றாக துவைத்து விடுகின்றன. மேலும் இந்த வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பதற்கு குறைந்த நீர் மட்டுமே செலவாகின்றன. ஆனால் இந்த ஃப்ரண்ட் லோட் வாஷிங்
மெஷினானது அதிக விலை கொண்டது. மேலும் இது நீண்ட நாள் நீடிக்கும்.
இதையும் படிங்க: வாஷிங் மிஷினில் இதெல்லாம் கூட சுத்தம் செய்யலாமே! நோட் பண்ணிகோங்க மக்களே!
உண்மையில் டாப் லோடு வாஷிங்மெஷினை விட ஃப்ரெண்ட்லோட் வாஷிங் மெஷின் தான் துணிகளை நன்கு துவைக்கின்றது. அதாவது ஃப்ரண்ட்லோட் வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது முதலில் துணியானது தண்ணீரில் நன்கு ஊறி பிறகு தான் மிஷினில் சுழற்றப்படுகின்றது. இந்த செயல்முறையால் துணியில் இருக்கும் அழுக்குகள் நீங்கபடுகின்றது. அதுவே டாப் லோடு வாஷிங் மெஷின் ஆனது துணியை தண்ணீரில் மூழ்கடித்து பிறகு ஒரு சுழற்சி முறையில் தான் துணியை துவைக்கின்றது இந்த செயல்முறையால் துணியில் இருக்கும் அழுக்குகள் அவ்வளவாக நீங்கி இருக்காது. எனவே துணிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கி துணிகளை நன்றாக சுத்தம் செய்வதற்கு சிறந்த வாஷிங் மெஷின் எதுவென்றால் அது ஃப்ரண்ட்லோடு வாஷிங் மெஷின் தான். அதுபோல பிரெண்ட்ஸ் லோடு வாஷிங் மெஷினின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை இதில் சேமிக்கலாம். அதுவே நீங்கள் குறைந்த விலையில் வசதியான வாஷிங் மெஷின் தேர்வு செய்ய விரும்பினால் டாப் லோட் சிறந்த தேர்வாகும்.