Bill Gates talks about his girlfriend Paula Hurd: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மெலிண்டாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, பவுலா ஹர்ட் என்ற காதலியுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர், டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் தனது புதிய காதலியைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், மெலிண்டாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு அவர் தற்போது புதிய உறவில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
27
Bill Gates Paula Hurd Dating
சமீபத்தில் பில் கேட்ஸ் 'தி டைம்ஸ் ஆஃப் லண்டடன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது விவாகரத்து முடிவை எண்ணி வருந்துவதாகக் கூறினார். இருப்பினும், கடந்த கால முடிவுகளில் இருந்து விலகிச் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இப்போது பவுலா ஹர்ட்டுடன் டேட்டிங் செய்துவருகிறார்.
37
Bill Gates Paula Hurd relationship
இந்நிலையில், பவுலாவுடனான தனது காதல் பற்றி முதல் முறையாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் பில் கேட்ஸ். செவ்வாயன்று டுடே ஷோவுக்கு அளித்த பேட்டியில், “பவுலா என்ற ஒரு தீவிர காதலி எனக்கு இருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒலிம்பிக்கிற்குச் செல்கிறோம், இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன” என்று கூறினார்.
47
Bill Gates Melinda French divorce
பவுலா ஹர்ட் பற்றி கேட்ஸ் பகிரங்கமாகப் பேசுவது இதுவே முதல் முறை என்றாலும், இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் பிரமாண்டமான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரும் ஒன்றாக தோன்றினர்.
57
Bill Gates Paula Hurd photos
பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரும் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், அவர்கள் பல டென்னிஸ் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பதைக் காண முடிகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
67
Bill Gates with his girlfriend
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்சு இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2021இல் அவர்களின் விவாகரத்து அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்ரோசாப்ட் ஊழியர் ஜோசப் எப்ஸ்டீனுடனான பில் கேட்ஸின் நெருக்கம்தான் அவர்களின் விவாகரத்துக்கு வழிவகுத்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
77
Paula Hurd, Bill Gates
பவுலா ஹர்ட் ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவி. 2019இல் மார்க் ஹர்ட் அகால மரணம் அடைந்தார். பவுலாவும் மார்க்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 62 வயதான பவுலா ஹர்ட் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆற்றிய பணிக்காக புகழ்பெற்றவர்.