
சாதாரண நாட்களிலே வீட்டில் கொசுக்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். அப்படியானால் மழை, குளிர் காலங்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு மோசமாக இருக்கும். இதன் விளைவாக மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு போன்ற ஆபத்தான தொற்று நோய்கள் தாக்கும். ஏன் சில சமயங்களில் உயிர் கூட போகும். அதுமட்டுமின்றி, கொசுக்களின் தொல்லையால் இரவு நிம்மதியாக கூட தூங்க முடியாமல் போகிறது. இதனால்தான் பலர் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுபத்தி, கொசு விரட்டி போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இவை கொசுக்களில் கொல்லும் என்றாலும், அவை நம்முடைய ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே கொசுக்களை இயற்கை முறையில் தான் விரட்ட வேண்டும். அதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். அவை என்னென்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொசுக்களை விரட்ட கொசுபத்தியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பதிலாக, மாலையில் உங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு கற்பூரத்துடன் வேப்பிலை சேர்த்து பற்றவைத்து அவற்றிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் பரப்பவும். இப்படி செய்தால் கொசுக்கள் வீட்டிற்குள் மீண்டும் வராமல் தடுக்கப்படும்.
சாம்பிராணி வீட்டிற்கு நறுமணத்தை தருவது மட்டுமல்லாமல் கொசுக்களை விரட்டவும் உதவுகிறது. எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் தொல்லை அதிகமாக இருந்தால் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு, சாம்பிராணியை புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்யுங்கள். இப்படி செய்தால் வீடு நறுமணமாக இருப்பது மட்டுமல்லாமல், கொசுக்கள் தொல்லையும் இருக்காது.
பூண்டு சமையலுக்கு மட்டும் இன்றி கொசுக்களை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து வரும் வாசனை கொசுக்களை உங்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கும். இதற்கு 4-5 பூண்டு பற்களில் நன்றாக நசுக்கி அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் கற்பூரத்தை சேர்த்து ஏற்றினால் அவற்றின் புகையானது வீடு முழுவதும் பரவும். இதனால் கொசுக்கள் செத்து மடியும்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் கொசுக்கள் தொல்லையா? அப்ப 'பூண்டை' இப்படி யூஸ் பண்ணுங்க..
உங்களது வீட்டை சுற்றி துளசி, வேம்பு, கற்றாழை போன்ற செடிகள் இருந்தால் கொசுக்கள் வராது. அதுமட்டுமின்றி கற்றாழை கொசு கடிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கொசு கடித்த இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் உடனே நிவாரணம் கிடைக்கும். அதுபோல துளசி இலை அல்லது வேப்பிலையை பேஸ்ட் போல் அரைத்து அதை கொசு கடித்த இடத்தில் தடவினால் சொறி, அரிப்பு ஏற்படாது.
இதையும் படிங்க: இந்த ஒரே ஒரு பொருளை வைத்து வீட்டில் உள்ள ஈக்கள், கொசுக்களை விரட்டலாம்; எப்படி தெரியுமா?
வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டியடிக்க மிளகுகளை எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நீங்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் கலந்து அதனுடன் சில துளிகள் இந்த எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து அதை வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்கள் அவற்றின் வாசனை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து ஓடிவிடும்.