
இந்தியாவின் இரயில்வே நெட்வொர்க் ஒரு போக்குவரத்து முறை மட்டுமல்ல, வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் களஞ்சியமாகவும் உள்ளது. தேசத்தின் உயிர்நாடியாக, இந்திய இரயில்வே ஒரு செழுமையான பாரம்பரியத்தை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள சில ரயில் நிலையங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ காலகட்டத்திற்கு முந்தையவை. இந்த நிலையங்கள் நவீன போக்குவரத்தின் வருகையைக் குறிப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் இந்தியாவின் பயணத்திற்கு சாட்சியாகவும் நிற்கின்றன.
ஹவுரா ரயில் நிலையம், ராயபுரம் ரயில் நிலைய முதல் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் வரை, இந்தியாவில் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இந்திய ரயில்வேயின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் முன்னேற்றம் மற்றும் கட்டிடக்கலை பிரகாசத்தின் சின்னங்களாக அவை நிற்கின்றன. இந்தியாவின் முதல் 10 பழமையான ரயில் நிலையங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் 1853 இல் திறக்கப்பட்டது, இது இந்தியாவின் பழமையான ரயில் நிலையம் ஆகும்.
1854 இல் திறக்கப்பட்ட ஹவுரா ரயில் நிலையம், இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் முதல் பிளாட்பார்மே இல்லாத பிசியான ரயில் நிலையம்; எங்கு உள்ளது தெரியுமா?
தென்னிந்தியாவின் முதல் ரயில் 1856 ஆம் ஆண்டு சென்னையின் ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இதனால் ராயபுரம் ரயில் நிலையம் இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.
1859-ம் ஆண்டு திறக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் செண்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் மிகவும் பிசியான ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் அலகாபாத் ஜங்சன் 1859-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களின் பட்டியலில் 5-ம் இடம் பிடித்துள்ளது.
குஜராத்தில் உள்ள வதோதரா ரயில் நிலையம் 1864-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த பட்டியலில் இந்த ரயில் நிலையம் 6-வது இடத்தில் உள்ளது.
1864 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பழைய டெல்லி ரயில் நிலையம் இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. 1903 ஆம் ஆண்டு தற்போதைய வடிவத்தில் புதுப்பிக்கப்பட்டது, பழைய டெல்லி ரயில் நிலையம் தேசிய தலைநகருக்கு சேவை செய்யும் இந்தியாவின் பழமையான ரயில் நிலையம் ஆகும்.
1914 இல் கட்டப்பட்ட லக்னோ சார்பாக் ரயில் நிலையம் இந்தியாவின் மிக அழகான பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம் இந்தியால தான் இருக்கு! அதன் நீளம் இத்தனை கிலோமீட்டரா?
1873-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ் செண்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். தற்போது சென்னை செண்ட்ரல் என்று அழைக்கப்படும் இந்த ரயில் நிலையம் நீண்ட தூர பயணங்கள் மற்றும் புறநகர பயணங்களுக்கும் முக்கியமானதாக திகழ்கிறது. இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களில் இது 8-வது இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா ஃபோர்ட் ரயில் நிலையம் இந்தியாவின் மிகவும் பழமையான ரயில் நிலையங்களின் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தாஜ் மஹால் மற்றும் ஆக்ராவில் உள்ள வரலற்று சிறப்புமிக்க இடங்களை பார்ப்பதற்கு முதன்மையான போக்குவரத்தாக உள்ளது.
ஜெய்பூரில் உள்ள ஜெய்பூர் ரயில் நிலையம் 1875-ம் ஆண்டு திறக்கப்பட்டது. ராஜஸ்தானின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் இந்த ரயில் நிலையம் நாட்டின் பழமையான ரயில் நிலையங்களின் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.