Kal Uppu Pariharam in Tamil:
அதில் முதன்மையானதாக இருப்பது உப்பு. உண்ணும் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கின்றாள். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று கூறுவார்கள். இத்தகு சிறப்புகள் வாய்ந்த உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க...உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க..வடகிழக்கு மூலையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் போதும்..
இத்தகைய கல் உப்பை எப்பொழுதும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். முந்தைய காலங்களில் எல்லாம் கல் உப்பை தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று இக்காலத்தில் கல் உப்பு பயன்பாடு குறைந்து, தூள் உப்பு அதிகரித்துவிட்டது. தூள் உப்பை காட்டிலும், கல் உப்பே ஆரோக்கியத்திலும், ஆன்மீக ரீதியாகவும் சிறந்ததாக இருக்கிறது.
Kal Uppu Pariharam in Tamil:
அத்தகைய கல் உப்பு பயன்படுத்தும் பொழுது அதை கைகளால் எடுத்து பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால், தரித்திரம் நீங்கி செல்வமகளின் அருள் கிடைக்கும். தன, தானியங்கள் பெருகும்.பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம். அத்தகைய கல் உப்பை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறப்பு ஆகும். அதேபோன்று, சமையல் கட்டில் கல் உப்புஅருகில் வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வைத்தால், கணவன் -மனைவி நீண்ட நாள் பிரச்சனை விலகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் தீராத பிரச்சனை விலகும். வேண்டிய பண வரவு இருக்கும்.
Kal Uppu Pariharam in Tamil:
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் அருள் கிடைக்க, வெள்ளியால் ஆன சாவிக் கொத்து பீரோவுக்கு பயன்படுத்துங்கள். அது போல ஒரு வெள்ளி காசு வாங்கி, மஞ்சள் துணியால் சுற்றி, ஒரு முடிச்சாக கட்டி உப்பு ஜாடியில் வைத்து விட வேண்டும். இதனால் வீண் செலவுகள் குறையும், தனம் மட்டும் அல்லாமல் தானியங்களும் பெருகும்.