வீட்டில் இருக்கும் எவ்வளவு கஷ்டங்களும், துன்பங்களும் தீர்வதற்கும், மகாலட்சுமி கடாட்சம் இல்லாத வீடுகளில், மகாலட்சுமி குடியேறவும் இந்த பரிகாரத்தை வெள்ளி, செவ்வாய் நாட்களில் செய்யலாம்.
இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது, வீடு முழுவதும் சுத்தம் செய்து விட்டு, பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய செம்பு டம்ளரை எடுத்து அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி அதில் வாசம் மிகுந்த பச்சை கற்பூரம் ஏலக்காய் துளசி இலைகள் போட்டு உங்கள் வீட்டு வடகிழக்கு மூலையில் வையுங்கள்.