Belly Fat: தொப்பை டக்குனு குறைய வேண்டுமா..? இரவில் இந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள்..

Published : Aug 20, 2022, 10:43 AM IST

Belly Fat: நம்மில் பெரும்பாலானோர், அதிகரித்து வரும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறோம். எனவே, உங்கள் தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் உணவு முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.   

PREV
17
Belly Fat: தொப்பை டக்குனு குறைய வேண்டுமா..? இரவில் இந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள்..
Healthy Food

நவீன வாழ்கை முறை மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, தொப்பை அதிகரிப்பது இன்றைய மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் கூட உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.

 மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: புதன் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்..

27
Healthy Food

இந்த உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, ஆஸ்துமா, இரைப்பை உள்ளிட்ட பல நோய்களை கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதைத் தவிர்க்க உடல் பருமனை குறைக்கும் வகையிலான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அவை என்னென்ன என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.

 மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: புதன் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்..

37
Healthy Food

வாழைப்பழம்:

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் முக்கனிகளுள் வாழைப்பழம் ஒன்றாகும். வாழைப்பழம், ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இவற்றில் உள்ள ஏ, பி, பி 2, சி, அதிக அளவு பி6 நார்சத்து இருப்பதால் கொழுப்பை குறைத்து உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

47
Healthy Food

உலர் திராட்சை :

நார்சத்து கொண்ட உலர் திராட்சையில் இரும்பு, கால்சியம் நார் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நீங்கள் இதனை அப்படியே சாப்பிடலாம், ஆனால் அதன் தண்ணீரை ஊற வைத்து குடித்தால், அது உடல் எடைமற்றும் கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது என்பதோடு பல விதமான நோய்களிலிருந்தும் உங்களை பாதுகாக்கிறது. 

57
Healthy Food

முழு தானிய வேர்க்கடலை ரொட்டி:

வேர்க்கடலை வெண்ணெய் மிகவும் ஆரோக்கியமானது, உலகிலேயே மிக குறைந்த வகையில் ஆரோக்கியமான நட்ஸ் உணவு வகைகளில் வேர்கடலைக்கு தனி இடம் உண்டு. எனவே, வேர்க்கடலை வெண்ணெய் தடவி 2 துண்டுகள் முழு தானிய ரொட்டியை சாப்பிடலாம்.

67
Healthy Food

தயிர்:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தயிர் ஒரு சிறந்த உணவு பொருளாகும். கால்சியம், வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B12, பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிர் என்பது குளிர்ச்சியான பானமாகும். தயிரின் கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறதுஉடல் சூட்டை தனித்து நமக்கு ஆரோக்கியம் தருகிறது. மேலும், தயிரில் இருக்கும் புரதம் சத்துக்கள் பசி உணர்வை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது..
 

77
Healthy Food

பாதாம்:

பாதாம் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான நட்ஸ் வகையாகும். இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான ஒமேகா 3. ஒமேகா 6, ஒமேகா 9 போன்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் இருக்கிறதுஅதேசமயம், உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் ஆரோக்கியமான வழிகளில் ஒன்று பாதாம் ஆகும். ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் 4 முதல் 6 பாதாம் எடுத்துக்கொள்வதால் அளவில்லாத நன்மைகளை பெறலாம். 

 மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: புதன் பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு இன்னும் 24 மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும்..

Read more Photos on
click me!

Recommended Stories