இன்றைய மேற்கத்திய உணவு பழக்க வழக்கம் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், நீரழிவு, இதய பாதிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்..மருத்துவர்களும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க வேண்டும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு இருக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றனர். எனவே, நம்முடைய கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க வீட்டிலே, மிக எளிமையான மருந்து உள்ளது என்றால் அது பேரிச்சம் பழம்.
பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 முதல் 5 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.
36
High Cholesterol
கெட்ட கொலஸ்ட்ரால்:
பேரிச்சம் பழம் எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. சீரான, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும். . தினமும் ஒருவர் பேரிச்சம் பழம் உட்கொள்வது அவசியம்.
பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் இருப்பின், தினமும் ஒருவர் 3 பேரிச்சம் பழத்தை உட்கொள்ள வேண்டும். இதில், உள்ள நார்ச்சத்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
56
Dates:
சர்க்கரை அளவை சீராக்குகிறது:
பேரிச்சம்பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சிப்பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும், பக்கவாதம், இதயம் சார்ந்த பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. இவை உடலுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் இருக்கும், மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.