சிலவகையான கிருமி தொற்றுகளினாலும், கருப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாகவும், இரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற காரணங்களினாலும் வெள்ளைப்படுதல் இருக்கலாம். குறிப்பாக பெண்களுக்கு தங்கள் வயது, மாதவிடாய் சுழற்சி அல்லது அடிப்படை சுகாதார நிலையைப் பொறுத்து பல்வேறு நிறங்களில் வெள்ளைப்படுதல் வரலாம்.
எனவே, உங்கள் வெள்ளைப்படுதல் இயல்பானதா என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.