இலந்தை இலை:
இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கையுள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி வைத்துக்கொண்டு உபயோகித்து வந்தால் வழுக்கை விழுவதை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
துளசி:
பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு மருத்து குணம் நிறைந்த மூலிகை தான் துளசி. இந்த துளசி தலைமுடியின் வலிமையை மேம்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும் உதவும். துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.