Wash fashion Cleaning tips: நம் வீட்டில் உள்ள அழுக்கடைந்த வாஷ்பேஷன் மற்றும் ௧ிச்சன் சிங்க் போன்றவற்றை வெறும் 5 நிமிடத்தில் பளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி..? என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
நம்ம வீட்டு இருக்கும் சமையலறையில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சிங்க்காக இருந்தாலும் சரி, இரண்டாவதாக, நம்முடைய வீட்டு ஹாலில், டைனிங் ஹாலில் கை கழுவ பயன்படும் வாஷ்பேஷன் ஆகிய இரண்டையும் பளிச்சென்று சுத்தம் செய்வது ரொம்பவே கஷ்டம். இந்த இரண்டிலும் இருக்கும் நாட்பட்ட கறைகளை சுத்தம் செய்வது அவசியம் ஆகும். இதற்கு தேவையான சூப்பர் டிப்ஸ் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சிங்கிள் பாத்திரம் கழுவி முடித்ததும் அதன் அடிபாகத்தை மட்டும் நாம் தேய்த்து கழுவி சுத்தம் செய்து விடுவோம், ஆனால் அதன் நான்கு ஓரங்களில் இருக்கும் அழுக்கையாரும் கண்டு கொள்வதே கிடையாது. இதனால் நாளுக்கு நாள் அதில் அழுக்குகள் சேர்ந்து பாசிப்பிடிக்க ஆரம்பித்துவிடும். இது விடாப்பிடியாக படிந்து சுத்தம் செய்வதே கடினம் ஆகிவிடும். இதனால் பல்வேறு நோய் தொற்றுகள் உருவாகும்.
35
Wash fashion Cleaning tips:
இந்த டிப்ஸ் எவர் சில்வர் சிங்க் உள்ளவர்களுக்குத் தான் பயன்படும். இதற்கு நாம் வாஷிங் சோடா எனப்படும் சலவை சோடாவை பயன்படுத்தலாம். இது துணிகளை வெளுக்க பயன்படுத்தும் சோடா ஆகும்.முதலில் உங்களுடைய பாத்திரம் கழுவும் சிங்கை எப்பவும் போல கழுவி சுத்தம் செய்து விடுங்கள். அதன் பின்பு அதை ஒரு துணியால் சுத்தமாக துடைத்து விட வேண்டும். பிறகு சூப்பர் மார்க்கெட் அல்லது மிகப்பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும் வாஷிங் சோடா வாங்கி வந்து சிங்க் மற்றும் வாஷ்பேஷன் முழுவதும் தூவி விடுங்கள்.
பின்னர் அதன் மீது நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் வினிகர் கொஞ்சம் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து 30 நிமிடங்கள் ஊற விட்டு விடுங்கள். நன்கு ஊறிய பிறகு இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு லேசாக தேய்த்தால் உப்பு கறை, அழுக்குகள் அனைத்தும் ரொம்ப சுலபமாக நீங்கி வந்துவிடும்.
45
Wash fashion Cleaning tips:
இதேபோல் இரண்டாவதாக, வாஷ் பேஷன் அடிக்கடி சோப் போட்டு சுத்தம் செய்தாலே பளிச்சென இருக்கும். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் நிறம் மங்கி அழுக்காக காணப்படும். முதலில் உங்களது வாஷ் பேசினை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் துணி வைத்து துடைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த வாஷ் பேஸினில் எல்லா இடங்களிலும் படும்படி பேக்கிங் சோடாவை தூவி விடவேண்டும். பிறகு 30 நிமிடம் ஊற விட்டு டிஷ்யூ பேப்பர், மேலே வினிகரை நன்றாக தெளித்து துடைத்து விடுங்கள்.
இதே போல, வாஷ் பேஷனிலும் சிங்கின் ஓரங்களிலும் தேய்த்து விட்டால் பாசி பிடித்த கறைகள், அழுக்குகள் போன்றவை ரொம்ப எளிதாக வந்துவிடும். உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, எந்த மாவு வேண்டு மென்றாலும் நீங்கள் எடுத்து .தேய்த்து விடுங்கள்.
வாஷிங் சோடாவில் நுரைக்காது என்பதால் கடைசியாக ஒருமுறை நீங்கள் டிடர்ஜென்ட் பவுடர் போட்டு தேய்த்து விடுங்கள். இது போல டைல்ஸ்களில் இருக்கும் உப்பு கறையை போக்கவும், வாஷிங் சோடா மற்றும் வினிகரை சேர்த்து பயன்படுத்தலாம்.