Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரன் சுக்கிரன் ஆகஸ்ட் 07 அதாவது இன்று கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால், எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள் என அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்க்கை, வெற்றி, காதல், பணம், தொழில் ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கடக ராசியில் நுழைகிறார். இதனால் சூரியனும் சுக்கிரனும் இணையும். பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சுக்கிரன் இன்று அதாவது 07 ஆகஸ்ட் 2022 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். ஆகஸ்ட் 31 வரை இந்த ராசியில் சுக்கிரன் நீடிப்பார். அதன்படி ஆகஸ்ட் 31 வரை குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். அந்த அதிர்ஷ்டகார ராசிகள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
35
Sukran Peyarchi 2022
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் பெரிய வெற்றியைப் பெறலாம். உங்களின் தொழிலும் நன்றாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நல்ல நேரமாக அமையும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். பழைய முதலீட்டில் லாபம் பெறலாம். மொத்தத்தில், இந்த நேரம் பணம் மற்றும் வேலையின் அடிப்படையில் மிகவும் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
கடக ராசியில் சுக்கிரனும் சூரியனும் இணைந்திருப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகுந்த அளவில் பலன்களைத் தரும். புதிய வருமானம் அதிகரிக்கும். அதேபோல் புதிய உத்தியோக உயர்வு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரிகள் பெரிய சலுகைகளைப் பெறலாம். பழைய முதலீட்டில் லாபம் பெறலாம். மொத்தத்தில், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
55
Sukran Peyarchi 2022
துலாம்:
துலாம் ராசிக்காரர்களின் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் வேலையில் பெரிய அனுகூலத்தைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். விரும்பிய வேலை கிடைத்த மகிழ்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் வேலை பாராட்டப்படும். காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும். தாய் வழி உறவு அமோகமாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.