Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

First Published Aug 7, 2022, 1:00 PM IST

Cholesterol: இன்றைய மேற்கத்திய உணவு கலாச்சாரம் காரணமாக, நம்முடைய உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து பல்வேறு விதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  

cholesterol

இன்றைய மக்கள் உணவின் சுவை கருதி, கொழுப்பு நிறைந்த துரித உணவுகளை அதிகமாக  சாப்பிட தொடங்கிவிட்டனர்.  இதனால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற  பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

மேலும் படிக்க...Turmeric powder: நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் உகந்ததா..? இதனால் பலன் உண்டா..? நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க..

cholesterol

மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பு மேலும் பல நோய்களை வரவழைக்கிறது.  எனவே, நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. எனவே, உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு கட்டுப்படுத்த எந்த மாதிரியான துரித உணவுகளை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இங்கே காண்போம்.

Cholesterol:

சீஸ்  பர்கர்:

 சீஸ்  பர்கர் மாட்டிறைச்சி, சீஸ் சாஸ், பன்றி இறைச்சி ஜாம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 13 கிராம் நிறைவுற்ற கொழுப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இதில் உள்ள 42 கிராம் நிறைவுற்ற கொழுப்பு அல்லது எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும் திறன் உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. இதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சி சேர்க்கப்பட்ட ஸ்ட்ராபெரி சாலட்' சாப்பிடலாம்.  இது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்காது.

மேலும் படிக்க...Turmeric powder: நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் உகந்ததா..? இதனால் பலன் உண்டா..? நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க..

Cholesterol:

பால்: 

பால் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இருப்பினும், பால் அதிக கொழுப்பு நிறைந்தது மற்றும் அதிக கலோரிகள் கொண்டது. ஒரு கி்ளாஸ் பாலில் 3.5% கொழுப்பு உள்ளது. இதில் உள்ள பாலாடைக்கட்டி சாப்பிடும்போது கொழுப்பின் அளவு அதிகரித்து அது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். எனவே, கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. 

Cholesterol:

வறுத்த உணவுகள்:

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கலோரிகள், டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த வறுத்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் தான். இந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பானது இதய நோய், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.எனவே, கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. 
 

Cholesterol:

KFC சிக்கன்:

 சிக்கன் பிரியர்கள் அதிக அளவில் விரும்புவது KFC சிக்கன் ஆகும். ஆனால் இது உடலுக்கு ஏற்றதல்ல.  ​​இதில் 25 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 40 கிராம் மொத்த கொழுப்பு மற்றும் 1,750 மில்லிகிராம் சோடியம் உள்ளது. எனவே, KFC-சிக்கன் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக 'KFC கென்டகி க்ரில்டு சிக்கன் தை' சாப்பிடலாம். இதனுடன் பச்சை பீன்ஸ் மற்றும் இனிப்பு கர்னல் சோளம் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க...Turmeric powder: நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் உகந்ததா..? இதனால் பலன் உண்டா..? நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க..

Cholesterol:

வெண்ணெய், சீஸ்:

வெண்ணெய், சீஸ் உள்ளடக்கிய பிஸ்கட்டுகள், கேக்குகள், டோனட்கள் ஆகியவை நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை அதிகமாக கொண்டிருக்கும். எனவே, இது போன்ற உணவுகளை தவிர்த்தல் அவசியம். 

click me!