
நட்பு என்னும் உறவைக் கொண்டாட உருவாக்கப்பட்ட நாள்தான் நண்பர்கள் தினம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்ஆகஸ்ட் 7-ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகள் அளித்து ஃப்ரெண்ட்ஷிப் பேண்டு கட்டியும் கொண்டாடுகின்றனர். அப்படியாக, இந்த தினத்தில் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கு பாடல்களை டெடிகேட் செய்து வருகின்றனர். அதிகளவில் அனைவரின் வாட்சப் ஸ்டேஸில் இடம்பெற்ற பாடல்கள்.
முஸ்தஃபா முஸ்தஃபா:
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்த திரைப்படங்களில் ஒன்று காதல் தேசம். இந்த படத்தில் இடம்பெற்ற 'முஸ்தஃபா' 'முஸ்தஃபா' என்கின்ற பாடலை வாலி தான் எழுதி இருந்தார். ரகுமானின் துள்ளலான இசை மட்டுமல்லாமல் குதூகலமான குரலும் பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கல்லூரி நட்பை நண்பர்களுடனான மகிழ்வான தருணங்களை, நட்பின் மகத்துவத்தை, பிரிவின் கண்ணீரைக் கொண்டாடும் 90களின் நட்பு கீதம் என பாராட்டப்படும் 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மனதை தொட்ட பாடலாக உள்ளது.
தளபதி
மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த தளபதி படம் நட்பிற்கு சிறந்த இலக்கணமாக தற்போதும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி ஆகிய இருவருக்கும் இடையேயான நட்பை இயக்குனர் மணிரத்னம் காட்டி இருந்த விதம் தற்போதும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்ற ''காட்டு குயிலு'' பாடல் வரிகள் இன்றும் பலரது வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்ஸில் பார்க்கலாம்.
வாலி எழுதி எஸ் பி பாலாசுப்ராமணியன் மற்றும் , K.J.யேசுதாஸ் பாடிய அசத்திய ''காட்டு குயிலு'' பாடல் வரிகள் சில உங்களுக்காக
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..
உள்ள மட்டும் நானே..உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்...வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு...நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன் வரிகள் நட்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆழமாக கருத்தாகும்.
பிரியமான தோழி:
2003ல் வெளிவந்த பிரியமான தோழி என்கின்ற திரைப்படம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருக்கும் அழகான நட்பை எடுத்து சொல்லும் விதமாக அமைந்தது. 90ஸ் கிட்டிஸ் காலத்தில் ஒரு பெண், ஆணுடன் நண்பராக பழகினால் அது காதலாகத்தான் இருக்கணும் என்கின்ற கூற்றை உடைத்தது. மாதவன், ஸ்ரீதேவி விஜயகுமார், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் ஆணும் பெண்ணும் கூட நண்பர்களாக இருக்கலாம் என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற சின்ன குயில் சித்ரா அம்மா பாடிய
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா பாடல் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றவை.
நண்பன்:
நண்பன் படம் 2012 இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இந்த படம் ஹிந்தியில் உருவான 3 இடியட்ஸ் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான். தமிழில் இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா டி க்ரூஸ், சத்யன் மற்றும் சத்தியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். நட்பை கொண்டாடிய படங்களில் மிக முக்கியமானது இந்த படம். கல்லூரி படிப்பிற்கு பிறகு யாருடனும் தொடர்பில் இல்லாத ஒரு நண்பனை மற்ற இருவரும் தேடி செல்லும் போது இதற்கு முன்பு அவர்கள் கல்லூரி வாழ்க்கையில் நடந்ததை பிளாஷ் பேக் காட்சிகளாக வரும் கதையில் இடம்பெற்றுள்ள என் ''FRIENDA'' போல் யாரு மச்சான் என்கின்ற பாடல் வரிகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவை.
இதனை கடந்து நட்பின் உன்னதத்தை போற்றும் வகையில், இன்னும் பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன ஏப்ரல் மாதம் படத்தில் வரும் மனசே மனசே மனதில் பாரம்..நண்பர் கூட்டம் பிரியும் நேரம்.
நட்புக்காக படத்தில் வரும் மீசை கார நண்பா, உனக்கு ரோஷம் அதிகம் டா , ரோஷம் அதிகம் டா, அத விட பாசம் அதிகம் டா...
நண்பரை பார்த்த தேதி மட்டும் ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில் உள்ளிட்ட பாடல்கள்...நாடோடிகள், கல்லூரி, பாஸ் என்கின்ற பாஸ்கரன் ...உள்ளிட்ட ஏராளமான படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்துக்கள்..!