
முதன்முதலில் 1958-ல் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூலை 30ம் தேதி சர்வதேச நட்பு தினத்தை அறிவித்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை, நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் வரும் ஞாயிறு அன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறது.
பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நல்ல நண்பர்களை எளிதில் சம்பாதிக்க முடியாது. எனவே, நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக வைத்து கொள்ள நண்பர்கள் அவசியம். எனவே, நீங்கள் இந்த நாளில் பிரிந்து போன நண்பர்களை தேடி, நட்பு கொள்ளுங்கள். புதிய நபர்களைச் சந்தித்து நல்லுறவை பேணுங்கள். அவர்களுக்கு சிறந்த நண்பர்கள் தின பரிசுகளை வாங்கி கொடுங்கள். இந்த 2022ம் ஆண்டு நண்பர்கள் தினத்துக்கு ஒரு நல்ல கிஃப்ட் வாங்கணும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஸ்மார்ட் வாட்ச்:
உங்கள் நண்பருக்கு மற்றுமொரு பாதுகாப்பான பரிசுப்பொருட்கள் பட்டியலில் ஸ்மார்ட் வாட்ச் சேர்த்துக் கொள்ளலாம். கட்டுக்கோப்பான உடலை மெயின்டைன் செய்ய வேண்டும் என்பதில் உங்கள் நண்பருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்றால், நிச்சயமாக அவருக்கு மிகச்சரியான பரிசாக ஸ்மார்ட் வாட்ச் இருக்கும் என்றே கூறலாம். இதுமட்டுமல்லாமல் புரோட்டீன் ஷேக் பாட்டில்கள், பிட்னஸ் பேண்ட் போன்றவற்றையும் நீங்கள் பரிசளிக்கலாம்.
புத்தகங்கள்:
உங்கள்நண்பருக்கு ஒரு புத்தகப் பிரியர் என்றால் யோசனையே இல்லாமல் கட்டாயம் ஒரு புத்தகத்தை வாங்கி கொடுத்து விடுங்கள். நிச்சயமாக இதற்கு அவர் நன்றி தெரிவிப்பதுடன், ஆழ்மனதில் இருந்து அன்பை வெளிப்படுத்த கூடும்.
சாக்லேட்:
உங்கள் நண்பர்களுக்கு சாக்லேட்டுகள் என்றால் உயிர் என்ற பட்சத்தில், இந்த நண்பர்கள் தினத்தை மிகவும் சிறப்பானதாக்க சாக்லேட்டுகள் ஒரு சிறந்த பரிசாக அளிக்கலாம். சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதிக கோக்கோ நிறைந்த சாக்லேட்கள் உடலுக்கு மிகவும் நல்லது. சாக்லெட்களின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியை தர கூடியவை.
கேக்:
நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர் குழு அல்லது நண்பருக்கு பிடித்த கேக் வகைகளை ஆர்டர் செய்து அதில் நட்பின் மகத்துவத்தை குறிக்கும் வாக்கியங்களை இடம்பெற செய்து அதை ஒன்று சேர்ந்து கட் செய்து நண்பர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். நண்பர்கள் மீதான உங்கள் பாசத்தை வெளிப்படுத்த நீங்களே உங்கள் கைகளால் கேக் தயாரித்து அதை அவர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.
செல்போன்
உங்கள் நண்பர் அடிக்கடி போன் வாங்குவதில் மோகம் உடையவராக இருந்தால், பல அழகிய கைப்பேசிகள் இன்று சந்தையில் கிடைக்கிறது. அதனுடன் சேர்த்து ஸ்டைலாக இருக்கும் கைப்பேசிகளை தேர்ந்தெடுங்கள். இந்த பொருளை கொடுப்பதால் நீங்கள் எப்போதும் அவருக்கு நல்ல நண்பராக இருக்க விரும்புவதை அது தெளிவாக எடுத்துக்காட்டும்.
பிரெண்ட்ஷிப் டே கார்டு:
நட்பை கொண்டாடும் வகையிலான கவிதைகள் அடங்கிய பிரெண்ட்ஷிப் டே கிரீட்டிங் கார்டுகளை உங்கள் நண்பர்களுக்கு பரிசளிப்பதன் மூலம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யலாம். மேலே சொன்ன கிப்டுகளை உங்கள் நண்பருக்கு நீங்கள் வாங்கி கொடுத்து அசத்தும் போது, அது உங்கள் மீது நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும். உங்கள் நட்பு உறவு மேலும் வலுப்படும்.