Flaxseed Benefit: ஆளி விதைகளை இப்படி ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்..பல்வேறு நோய்களை நிச்சயம் ஓட ஓட விரட்டும்

Published : Aug 07, 2022, 02:12 PM IST

Flaxseed Benefits: நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு ஆளி விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது...அவை என்னென்னெ என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

PREV
16
Flaxseed Benefit: ஆளி விதைகளை இப்படி ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்..பல்வேறு நோய்களை நிச்சயம் ஓட ஓட விரட்டும்
Flaxseed Benefits:

ஒருவர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட உணவுகளில் ஆளிவிதைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆளி விதைகள் ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும். இதில் இருக்கும் ஒமேகா -3 உள்ளிட்ட கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை குறைக்கும். ஆளிவிதைகள் பொதுவாக தூளாக அரைக்கப்பட்டு பின்னர் உட்கொள்ளப்படுகிறது. 

 மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

26
Flaxseed Benefits:

ஆனால், இந்த ஆளி விதையை பல்வேறு வழிமுறைகளில் வைத்து சாப்பிடலாம். மற்றுமொரு வழியாக, முளைக்கட்ட வைத்தும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். எனவே, தினமும் ஆளி விதை சாப்பிடுவதால் என்னென்னெ  நன்மைகள் கிடைக்கும் என்று  இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். ஆளி விதையில் வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன. அவை உடலின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

36
Flaxseed Benefits:

பக்கவாதம் மற்றும் மாரடைப்பு:

பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. ஆளிவிதைகள் கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது.  இதில் உள்ள உயர் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன.

46
Flaxseed Benefits:

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்:

ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதன் மூலம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும். அதே நேரத்தில் இரத்த சர்க்கரை அளவையும்  இதன் மூலம் குறைக்கலாம். 

56
Flaxseed Benefits:

புற்றுநோய்:

ஆளி விதைகளில் லிங்கன் என்று அழைக்கப்படும் ஒரு வித ரசாயனம் காணப்படுகின்றது. இது புற்றுநோய் போன்ற பிற கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமது உடலை பல வகையான தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். 

 மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

66
Flaxseed Benefits:

மாதவிடாய்:

ஆளி விதைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை. மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்கிறது. அதேபோன்று, மாதவிடாய் நின்ற பெண்கள், தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்தால், சுழற்சி மாற்றங்களை தடுக்கும் மற்றும் கருப்பை செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள் .  

Read more Photos on
click me!

Recommended Stories