உங்கள் வீட்டில் எலி தொல்லையா..? இந்த ஒரு பால் போதும்...மூலை முடுக்கெல்லாம் ஒளிந்துள்ள எலியை தேடி தேடி கொல்லும்

First Published | Jul 28, 2022, 1:19 PM IST

Rat killer ideas: மூலை முடுக்கெல்லாம் ஒளிந்துள்ள எலியை  ஓட ஓட விரட்டி அடிக்க கூடிய ஒரு அற்புதமான பால்  இருக்கு, அதனை எப்படி பயன்படுத்தலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

rats

வீட்டில் எலி புகுந்து விட்டாலே, இரவில் தூக்கம் இருக்காது. எப்போதும் சத்தம் இருந்து கொண்டே இருக்கும். என்னதான் எலிப் பொறி வாங்கி வைத்து பார்த்தாலும், எலி மட்டும் ஓய்ந்த பாடு இருக்காது. நீங்கள் எங்கையாவது இரண்டு நாட்கள் ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிடுவது மட்டுமின்றி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டில் இருக்கும் முக்கிய பத்திரங்கள்,புத்தகம், கேபில்கள் இப்படி எந்த ஒரு பொருளையும் விடாமல் கடித்து குதறி வைத்திருக்கும். வீடே அலங்கோலமாக இருக்கும். 

மேலும் படிக்க....ஆகஸ்ட்1ல் புதன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி கடலில் நீந்துவர்..உங்கள் ராசி இதுவா?

rats

சில நாட்கள் சென்றதும்  குட்டிகள் போட்டு உங்கள் வீட்டிலேயே குடியேறி விடும். வீட்டில் தான் இந்த தொந்தரவு என்று பார்த்தால், தோட்டத்திலும் எலிகளின் நடமாட்டம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். எப்போதும், எலியுடன் போராட வேண்டிய நிலை உங்களுக்கு இருக்கும். எனவே, ..மூலை முடுக்கெல்லாம் ஒளிந்துள்ள எலியை  ஓட ஓட விரட்டி அடிக்க கூடிய ஒரு அற்புதமான பால்  இருக்கு, அதனை எப்படி பயன்படுத்தலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Latest Videos


rats

மேலும், எலி தானே என்று அலட்சியமாக எப்பொழுதும் இருந்து விடக்கூடாது. எலிகளால் மனிதருக்கு நிறைய நோய்கள் பரவுகின்றன. எலியின் வாய் பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் மனிதருக்கு காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன. சில சமயம் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 
 

rats

குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பாய்சன் வகை மருந்துகள் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எலிப்பொறி என்றால் அவ்வளவு சீக்கிரம் எலிகளும் மாட்டுவதில்லை. எனவே இதற்கு இயற்கையான வழியை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. அப்படியாக, இயற்கையாக வளரக்கூடிய செடிகளில் ஒன்றான எருக்கம் இலை செடியில் இருந்து கிடைக்கும் பால் இதற்கு சிறந்த ஒன்றாகும்.

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

rats

இந்த எருக்கன் செடி, காலி இடங்கள் அல்லது குப்பை கூழங்களில் சர்வ சாதாரணமாக வளரும் தன்மை கொண்டது. இணர் செடியின் பால், எலிக்கு விஷமாக இருக்கக்கூடும். எனவே எருக்கஞ்செடியின் பாலை ஒரு சிறு தக்காளி துண்டில் நன்கு தடவி விடுங்கள். பிறகு,எலி வரும் இடங்கள், மூலை முடுக்குகளில் எல்லாம் இதை வைத்து விட்டால் போதும். 

rats

இதை சாப்பிடும் எலிக்கு மூச்சு திணறல் ஏற்படும். தண்ணீர் தேடி எங்காவது ஓடி வெளியே செல்ல துடிக்கும். வெளியில் சென்றாலும் அதனால் மூச்சு விட முடியாமல், எங்காவது போய் இறந்து விடக்கூடும். எனவே இனி உங்கள் வீட்டு பக்கம் அந்த எலி திரும்பி வரவே வராது. இனி இதைக் கண்டால் எலி ஓட ஆரம்பித்து விடும். இருப்பினும், குழந்தைகளிடமிருந்து இந்த உணவு பொருளை கண்டிப்பாக தள்ளி வைக்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்து எலியை விரட்டி அடியுங்கள்..

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

click me!