கேஸ் அதிகம் செலவாகாம சேமிக்க, முதலில் கேஸ் பர்னரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பர்னரை சர்வீஸ் செய்ய வேண்டும். பர்னர் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதை கேஸ் ஸ்டவ் ஃப்ளேமின் நிறத்தைப் பார்த்தாலே கண்டு கொள்ளலாம். கேஸ் ஸ்டவ் நெருப்பின் நிறம் சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக வந்தால், பர்னரில் சிக்கல் இருப்பதாக அர்த்தம். பர்னரை உடனடியாக சுத்தம் செய்யவும். முடிந்தால், ஒரு முறை சர்வீஸ் செய்யுங்கள். இது தேவையற்ற கேஸ் இழப்பைத் தவிர்க்கும்.