நீங்க அசைவ உணவு சாப்பிடுகிறவர்களா? அப்போ உஷாரா இருங்க...!

Published : Mar 03, 2023, 12:17 PM IST

அளவுக்கதிகமாக அசை உணவுகள் எடுத்துக் கொண்டால் யூரிக் அமில பிரச்சனை ஏற்படக் கூடும்.

PREV
15
நீங்க அசைவ உணவு சாப்பிடுகிறவர்களா? அப்போ உஷாரா இருங்க...!
யூரிக் அமிக பிரச்சனை ஏற்படும்

நான் எல்லாம் சிக்கன், மட்டன் இல்லாமல் இருக்கமாட்டேன் என்று சொல்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் அசை உணவு சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள், தினந்தோறும் அசை உணவு சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அசைவ உணவு உடலுக்கு கேடு என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப அதிகமாக அசைவ உணவு சாப்பிட்டால் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 

25
யூரிக் அமிக பிரச்சனை ஏற்படும்

அப்படி ஏற்படுத்தும் பாதிப்புகளில் முக்கியமாக அதிகளவில் யூரிக் அமிலம் உருவாவதை தூண்டும். இது ரத்தத்தில் காணப்படும் தேவையற்ற கழிவு. அளவுக்கதிகமாக யூரிக் அமிலம் சுரப்பதை ஹைபெர்யுரிசிமியா என்பார்கள். இது கீல்வாதம் போன்ற நோய்களை உருவாக்கும். உடலின் கழிவு யூரிக் அமிலம். கல்லீரலில் சுரக்கப்பட்டு சிறுநீரகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன் பிறகு சிறுநீர் வழியாக வெளியேறும்.

35
யூரிக் அமிக பிரச்சனை ஏற்படும்

சிறுநீர் அல்லது கல்லீரல் பிரச்சனை காரணமாக யூரிக் அமிலம் அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதன் மூலமாக உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் சுரக்கிறது. இதன் காரணமாக உடலில் அதிகளவில் வலி ஏற்படும். மூட்டு வலி கூட ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். மேலும், சிறுநீரில் துர்நாற்றம் வீசும். சில நேரங்களில் வாந்தி கூட ஏற்படலாம்.

45
யூரிக் அமிக பிரச்சனை ஏற்படும்

அளவுக்கு அதிகமாக பியூரிக் அமிலமும், புரோட்டீன் சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளும் உட்கொண்டால் யூரிக் அமிலத்தின் அளவும் அதிகரிக்கும். இதன் காரணமாக பலரும் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பு உடனடியாக தெரிவதில்லை. ஆனால், அதற்கான அறிகுறிகள் தென்படும். உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக யூரிக் அமில பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

55
யூரிக் அமிக பிரச்சனை ஏற்படும்

அசைவ உணவுகளுக்குப் பதிலாக சத்துக்கள் அதிகம் கொண்ட கீரை வகைகள், காய்கறிகள் கொண்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு அதிகம் கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories