வாரம் இருமுறை இந்த கீரை சாப்பிட்டால்.. வாழ்க்கை முழுக்க கல்லீரல், சிறுநீரகம் பிரச்சனையே கிட்ட வராது..!

First Published | Mar 3, 2023, 1:11 PM IST

அரை கீரையை உணவில் அடிக்கடி எடுத்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. 

அரை கீரையில் உள்ள அத்தியாவசிய சத்துகள் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இதர தாதுக்கள் உடலை வலுவாக வைத்திருக்க துணை புரிகின்றன. அரை கீரையை வளரும் குழந்தைகள், பதின்பருவத்தினர், கர்ப்பிணிகள், நடுத்தர வயதினர் என எல்லோருமே உண்ணலாம். இதில் கிடைக்கும் மருத்துவ நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.  

குடல் புண் ஆற்றும் 

அரை கீரையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும். உடலை தாக்கும் தொற்று நோய்களில் இருந்து தப்பலாம். நல்ல கிருமி நாசினியாக செயல்படும் ஆற்றல் கொண்டது. சிலருக்கு சரியான நேரத்தில் சாப்பிடாமல் வயிற்றில் குடல் புண்கள் ஏற்பட்டிருக்கும். இதனால் உணவை செரிக்க சிரமப்படுவார்கள். அவர்கள் அரை கீரையை குழம்பு, கூட்டு மாதிரி நன்கு வேகவைத்து உண்பதால் குடல் புண்கள் குணமாகும். எப்பேர்ப்பட்ட மலக்கட்டை ஆனாலும் அதை இளக செய்து மலச்சிக்கலை தீர்க்கும். 

Tap to resize

ஜுரம் காய்ச்சல் போக்கும் 

ஜுரம் காய்ச்சல் ஆகிய நோய்களால் அவதிபடுபவர்களுக்கு உடல் வெப்பம் கூடி பலவீனத்தை உண்டாக்கும். அவர்களின் கை, கால்களில் கூட வலி ஏற்படும். ஜுரம் காய்ச்சல் குணமான இன்னும் பலவீனமாக இருப்பார்கள். அவர்கள் பழைய உடல் பலம் பெற அரை கீரையை சாப்பிட்டு வந்தால் போதும்.  

புற்றுநோய்

வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் குடல், கணையம் ஆகியவறரையும் பாதிக்கும். அரை கீரையை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த வயிற்று புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு. புற்று நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் நோயை கட்டுப்படுத்த ஆற்றல் கிடைக்கும். 

விஷக்கடிக்கு மருந்து 

வண்டுகள், பூச்சிகள் ஆகியவை தீண்டும்போது அவற்றின் நச்சை முறிக்கும் ஆற்றல் அரை கீரைக்கு உள்ளது. 

சிறுநீரகம்

சிலருக்கு சிறுநீரகங்களில் உப்பு அதிகம் படிந்து கற்கள் உருவாகும் நிலை வரும். சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் அரை கீரையை நாள்தோறும் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கூட கரையுமாம். நல்ல தண்ணீர் அருந்தி, அரை கீரையும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரை நன்கு பெருகும். நச்சுக்கள் வெளியேறும். 

இதையும் படிங்க: கருஞ்சீரகம் இப்படி சாப்பிட்டு பாருங்க.. இறப்பை தவிர எல்லா நோய்களுக்கும் தீர்வு.. அட யாரு சொன்ன தெரியுமா?

கல்லீரல் நலம்..! 

கல்லீரல் பாதிப்பால் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்கி அவதிப்படுபவர்கள் ஏற்கனவே உண்ணும் மருந்துகளோடு அரை கீரையை அவ்வப்போது சாப்பிட்டால் விரைவில் கல்லீரல் தொடர்பான நோய்கள் தீரும். 

கருவுற உதவும் 

கருத்தரிக்க இயலாத பெண்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அரை கீரை உண்ணலாம். இதனால் அவர்களின் கருப்பை வலு பெறும். சீக்கிரம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாக்கும். 

இதையும் படிங்க: தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!

ஆண்மையை கூட்டும்..! 

ஆண்கள் மனஅழுத்தம் காரணமாக இனப்பெருக்க நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும். இதனால் சிலருக்கு ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை ஆகிய குறைகள் வருகிறது. இந்த ஆண்கள் அடிக்கடி அரை கீரையை சாப்பிட்டால் ஆண்மை குறைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். 

வாரம் இருமுறையேனும் அரை கீரையை உண்டு வந்தால் அதன் நன்மைகளை முழுமையாக பெறலாம். 

இதையும் படிங்க: உங்க வீட்டில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.. வெள்ளிக்கிழமை இதை செய்தாலே போதும்..

Latest Videos

click me!