ஏசியை இப்படி செட் பண்ணுங்க! கரண்டு பில் ரொம்ப கம்மியா வரும்.. சூப்பர் டிப்ஸ்!!

First Published Mar 15, 2023, 7:34 PM IST

கோடைகாலத்தில் ஏசியை கரண்டு பில்லுக்கு பயந்து குறைவாக பயன்படுத்த வேண்டாம்.. எளிய டிப்ஸ் மூலமாக அதை சமாளிக்கலாம். 

ஒவ்வொரு கோடை காலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை எப்படி வதைக்கப் போகிறது என்ற பயம் எல்லோர் மனதிலும் வந்துவிடும். இந்த வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சிலர் வீட்டில் ஏசியை தான் தெய்வம் போல நம்பி இருப்பர். சிலர் வெயில் வதங்கி புதிய ஏசி வாங்கி மாட்டி கொள்வார்கள். என்னதான் புது ஏசி வாங்கினாலும் கரண்ட் பில்லுக்கு பயந்து குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் அதை பயன்படுத்துவார்கள். 

இந்தியர்களின் பட்ஜெட் மூளை ஒரு அறையில் ஏசியை மாட்டிவிட்டு மொத்த குடும்பமும் அங்கே தஞ்சம் புகுந்துவிடுவார்கள். கரண்ட் பில் எக்கச்சக்கமாக வந்து விடும் என்ற பயத்தில் அதை குறைவாக தான் பயன்படுத்தவும் செய்வார்கள். நம்பமாட்டீர்கள்.. கரெண்ட் பில் கட்டியே பாக்கெட் காலியான கதைகள் கூட உண்டு. ஆனால் புதிய ஏசி வாங்கும் போது சில விஷயங்களை கவனித்து வாங்கிக் கொண்டால் குறைவான கரண்ட் பில் தான் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே போல சில டிப்ஸ் பயன்படுத்தும்போது பழைய ஏசியிலும் குறைவான கரண்டு பில் வரும். சரி சரி டக்னு டிப்ஸ் சொல்ல சொல்றீங்க... வாங்க பார்க்கலாம். 

5 ஸ்டார்ஸ்..! 

மின்சாரத்தை முறையாக பயன்படுத்தி கரண்டு பில் குறைவாக வருவதற்கு சரியான ஏர் கண்டிஷனர் வாங்க வேண்டும். இதை கரெக்டாக பண்ணிவிட்டால் கரண்ட் பில் குறைவாக வர வாய்ப்புள்ளது. புதிய ஏசி வாங்குபவர்கள் அதன் ரேட்டிங் என்ன என்பதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக 5 ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அந்த ஏசி மின்சாரத்தை கணிசமாக மிச்சப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இன்வெர்ட்டர் எனும் தொழில்நுட்பம் இருக்கும் ஏர் கண்டிஷனர் 30 முதல் 35 சதவீதம் வரை மின்சாரத்தை மிச்சப்படுத்துமாம். இந்த ஏசிகளை கவனமாக பார்த்து வாங்குங்க.

சர்வீஸ் முக்கியம் 

ஏசியில் ஆயிரக்கணக்கிலான பாகங்கள் இருக்கின்றன. முறையாக சர்வீஸ் செய்வது அவசியம். தொடர்ந்து சர்வீஸ் வழங்கும் பிராண்டுகளை வாங்குங்கள். ஏ.சி.யின் நல்ல இயக்கத்தை ஊக்குவிக்க ஒரு வாரம் முதல் 2 வாரங்களுக்குள்ளாக அதன் பில்டர்களை சுத்தம் செய்துவிடுங்கள்.

தேவைக்கு தகுந்த ஏசி..

ஏசி வாங்கும்போது உங்களுடைய வசிப்பிடத்திற்கு ஏற்ற ஏசியை வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். அறையின் அளவு, சூரிய ஒளி பாயும் அளவு ஆகியவை பொறுத்து ஏசி வாங்குவது அவசியம். எடுத்துக்காட்டுக்கு சூரிய வெப்பம் அதிகம் வரவில்லை என்றால் 150 சதுர அடி அறை ஒன்றுக்கு 1.50 திறன் இருக்கும் ஏர் கண்டிஷனர் போதும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

இதையும் படிங்க: சமையல் எண்ணெய் கொழுப்பு ஏத்திடும்னு சொல்வாங்க.. இந்த எண்ணெய் தினம் 1 ஸ்பூன்.. புற்றுநோய் வந்தா கூட சமாளிக்கும்

இந்த டிகிரி வெப்பநிலையில் வைங்க..! 

பலரும் வீட்டில் வெப்பம் ரொம்ப இருந்தால் ஏசியை 18, 19 டிகிரியில் வைத்துவிடுவார்கள். இதனால் வெப்பம் குறையும்..ஆனால் கரண்டு பில் எகிறிவிடும். எப்போதும் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்து குளிரை அனுபவியுங்கள். இது மின்சாரத்தை மிச்சப்படுத்தி தரும். மறக்காதீங்க... ஏசி வெப்பநிலை 24 டிகிரியாக இருப்பது அவசியம். 

ஏசி ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே குளிரூட்டும். அதனுடைய குளிரூட்டும் வேகத்தை அதிகரிக்க, அறையில் மின்விசிறியைப் பயன்படுத்தவும்.

இதையும் படிங்க: வாசலில் இந்த 2 பொருள் மட்டும் கட்டுங்க..! கெட்ட நேரத்துக்கு முடிவு காலம்.. எண்டு இல்லாம ஐஸ்வர்யம் கிடைக்கும்

click me!