தொப்பை கொழுப்பு அதிகமாக இருப்பின், பின் காணும் நோய்ககளை உண்டாக்கும்:
ஆஸ்துமா, மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ,மாரடைப்பு, டைப் 2 நீரழிவு நோய்
என்னென்ன காரணங்களினால் தொப்பை கொழுப்பு அதிகரிக்கிறது:
தவறான உணவுப் பழக்கம்:
அதிக மாவுச்சத்து , குறைந்த புரதச்சத்து , அதிக கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதால் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.
மேலும் பாஃஸ்ட் புட், பிஸ்கட் வகைகள்,பதப்படுத்தப் பட்ட உணவுகள் மற்றும் பேக்கரி உணவுகள் போன்றவற்றில் டிரான்ஸ்ஃபேட் ( நிறைவுறா கொழுப்பு) அதிக அளவில் காணப்படுகிறது.
உடற்பயிற்சி இல்லாமை:
உடல் இயக்கம் வெகு குறைவாக இருப்பதால் அது வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பை அதிகபடுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறது.
தேவைக்கு அதிகமான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை மற்றும் தொப்பை பல மடங்கு அதிகரிக்கும்.
சரியான தூக்கமின்மை:
போதுமான தூக்கம் அல்லது குறைந்த தூக்கம் கொண்டவர்கள் அதிக உணவு எடுத்துக்கொள்வதற்கு தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நைட் ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள், இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்கள் போன்றோர்களுக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் மேற்கொள்ள குறைவான வாய்ப்பு இருப்பதால், வயிற்று பகுதியில் பெருமளவில் கொழுப்பு சேரும் நபர்களாக இருக்கிறார்கள்.