தினமும் அரை ஸ்பூன் மஞ்சள் சாப்பிட்டு பாருங்க.. உங்கள் உடலில் அற்புதம் நடப்பது உறுதி..!

First Published | Mar 13, 2023, 6:33 PM IST

தினமும் மஞ்சள் எடுத்து கொள்ளும் நபர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

மஞ்சளில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. ஒரு மாதத்திற்கு தொடர்ந்து மஞ்சள் எடுத்துக் கொண்டால் உடலில் ஏராளமான மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடியும். பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளும் போது கூடுதல் நன்மைகளை பெறுகிறார்கள். பல உடல் நல பிரச்சனைகளை கூட தீர்க்கும் வல்லமை மஞ்சளுக்கு உண்டு. அது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 

மஞ்சளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது. செல்கள் சேதமாவதை மஞ்சள் தடுக்கும். மன அழுத்தம் கூட குறையும். அது சரி மஞ்சளுக்கும் மனச்சோர்வுக்கும் தொடர்பு இருக்கா? மஞ்சளில் இருக்கும் குர்குமின் தான் மனச்சோர்வு அறிகுறிகளை நீக்குகிறதாம். 

Tap to resize

மஞ்சள் உடலில் நச்சு நீக்கியாக செயல்படுகிறது. அதனால் தான் நச்சு நீக்கும் பானங்களில் மஞ்சளை சேர்ப்பார்கள். கல்லீரலில் சேரும் நச்சுக்களை மஞ்சள் அறவே நீக்குகிறது. கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்தும். மஞ்சள் நமக்கு நினைவாற்றலை கொடுக்கும். மூளையை நன்கு செயல்பட வைக்கும். பர்கின்சன் நோய் வரும் அபாயத்தை குறைக்கும். 

உடல் எடையை குறைப்பதில் மஞ்சள் நல்ல பலனைத் தரும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளை கூட கொழுப்பாக சேமிப்பதை மஞ்சள் தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. மஞ்சள் வலி நிவாரணியாக செயல்படும். வாத நோய், கீல்வாதம் ஆகியவற்றில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு

எலுமிச்சை சாறு, மஞ்சள், தண்ணீர் ஒரு துண்டு இஞ்சி, தேன் ஆகிவைக் கொண்டு தயாரிக்கப்படும் எலுமிச்சை பானம் நமக்கு நிறைய மருத்துவ நன்மைகளை தருகிறது. முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் மஞ்சளையும் துருவிய இஞ்சி துண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் தண்ணீர் கொதித்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு நீர் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு தேன் கலக்கி குடிக்கலாம். இந்த நீரை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வாக இருப்பதோடு உடலுக்கும் நல்லது.  

இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..

Latest Videos

click me!