China Vastu Tips: வீட்டில் இந்த இடத்தில் அந்தப் பொருளை வைத்தால் குபேரன் செல்வத்தை அள்ளி அள்ளி கொடுப்பார்!!

First Published Mar 10, 2023, 5:14 PM IST

ஒவ்வொரு மனிதருக்கும் பணம் என்பது இன்றைய கால கட்டத்தில் முக்கியமாகி விட்டது. வளர்ந்து வரும் பொருளாதார நிலையில், பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுமட்டுமின்றி, குடும்பத்தை நடத்துவதற்கு, குழந்தைகளை படிக்க வைக்க, பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நமக்கு என்று ஒரு வீட்டை உருவாக்கிக் கொள்ள என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மனிதன் பணத்திற்கு பின்னர் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

காலையில் எழுந்தவுடன் நகரங்களில் குறைந்தது சிலர் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பயணித்து பணிக்கு செல்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.  மேலும் மேலும் வாழ்க்கையில் உயர பணம் மிகவும் முக்கியம். அந்தப் பணத்தை எப்படி நம் வீட்டில் செய்யப்படும் சிறிய சிறிய மாற்றங்கள் மூலம் கொண்டு வரலாம் என்று பார்க்கலாம். பெங் சூயி என்று கூறப்படும் சீன வாஸ்து முறையில் இதை செய்து பார்க்கலாம். 

பெங் சூயி தத்துவத்தில் நிலம், நெருப்பு, நீர், காற்று மற்றும் மரம் ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. வீட்டில் எந்த திசையில் இவற்றை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்க முடியும். இவை அனைத்தும் வீட்டில் சரியான இடத்தில் இல்லை என்றாலும் பாதிப்புகள் வரலாம். உங்களது வீட்டில் பெங் சூயி காசு கிண்ணத்தில் காசுகளை கொட்டி வைத்தால் என்ன நடக்கும், எந்த திசையில் வைக்க வேண்டும், வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்தக் கிண்ணத்தில் கிறிஸ்டல், கிளாஸ் பீட்ஸ், கற்கள், காசுகள், நகைகள் அல்லது பள பளக்கும் நகைகளை வைக்கலாம். உண்மையான காசுகளை வைக்க விரும்பவில்லை என்றாலும், பெங் சூயி காசுகளை வைக்கலாம். 

பெங் சூயி கிண்ணங்கள் மரத்தில், மெட்டலில், செராமிக், கிளாஸ் அல்லது கிரிஸ்டலில் செய்யப்பட்டவையாக இருக்கலாம். கண்டிப்பாக பிளாஸ்டிக் கிண்ணம் பயன்படுத்தக் கூடாது. 

வீட்டில் எந்த இடத்தில் பெங் சூயி காசு கிண்ணத்தை வைக்க வேண்டும் என்ற முறை இருக்கிறது. அதாவது, வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வரவேற்பு அறையில் வைக்கலாம். இதுதான் பெங் சூயி காசு கிண்ணத்தை வைப்பதற்கான சரியான இடம். உங்களது வரவேற்பு அறையின் இடது மூலையில் வைக்கலாம். ஆனால், அந்த இடம் நாள் முழுவதும் பார்வைக்கு தெரிவது போன்று இருக்க வேண்டும்.

அதேசமயம் வீட்டின் சிங்க் இருக்கும் இடம், குளியலறை ஆகிவற்றின் அருகில் வைக்கக் கூடாது. வைத்தால் பணம் நிற்காது.

உங்களது கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் கூட நீங்கள் பெங் சூயி காசு கிண்ணத்தை வால்பேப்பர் ஆக வைத்துக் கொள்ளலாம். வீட்டில் பணம் வைக்கும் இடத்திற்கு அருகிலும் வைக்கலாம். அதேபோல், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைக்கலாம். 

click me!