கோடைகாலம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் பலரும் வீட்டு மாவு, தயிர் எல்லாம் புளித்து போகுது என புலம்புவார்கள். அதிக வெப்பத்தின் காரணமாக இப்படி சீக்கிரம் புளித்து பொங்கி வாய்க்கு ருசிக்காமல் போகும். இந்த மாதிரி வீணாகாமல் எப்படி ரொம்ப நாள் அரிசி மாவையும், தயிரையும் பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
இட்லி மாவு ரொம்ப நாள் புளிக்காமல் இருக்க வேண்டுமென்றால் மாவு அரைக்கும்போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இட்லியோ தோசையோ அதற்கு மாவு அரைக்கும்போது முதலில் மொத்தமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து ப்ரிட்ஜில் பாதுகாக்க வேண்டும். மொத்தமாக உப்பு போடக் கூடாது. தேவைப்படும் மாவை கலக்கும்போது மட்டும் தான் உப்பு போடவேண்டும்.
அடிக்குற வெயிலில் மொத்தமாக உப்பு போட்டால் மாவு சீக்கிரம் புளித்து போகும். இது தான் எங்களுக்கே தெரியும் என்கிறீர்களா? அதுமட்டுமில்லை, ப்ரிட்ஜில் வைக்கும் மாவில் வெற்றிலையை காம்பு நீக்காமல் போட்டு வையுங்கள். அப்படி செய்தால் மாவு சீக்கிரம் புளிக்காது. குறிப்பாக வெற்றிலையின் காம்பு மாவினுள் அழுத்தி இருக்க வேண்டும்.
வெற்றிலை மட்டுமில்லை மாவு புளிக்காமல் இருக்க கற்பூரவல்லி எனும் ஓமவல்லி செடியும் நமக்கு உதவும். ஓமவல்லியில் மருத்துவகுணங்கள் அதிகம் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒமவல்லி செடியில் இருந்து 4 அல்லது 5 இலைகளை பறித்து அதனை மாவுக்குள் போட்டு வையுங்கள். இதில் இருக்கும் காரத்தன்மை மாவை புளிக்கவைக்காமல் இருக்குமாம். என்ன யோசனை பண்றீங்க.. கற்பூரவள்ளியின் வாசனை மாவில் வராது. உடம்புக்கும் நல்லது.
தயிர் வெயில் நேரத்தில் நம் உடலுக்கு உற்ற நண்பன். அதனை அதிகம் நாட்கள் கெடாமல் வைத்திருக்க எளிய டிப்ஸ் இருக்கு. தயிரை உறையூற்றி வைத்துள்ள 2 நாட்களுக்குள் புளிக்கும் தன்மை கொண்டது. தயிரை பொறுத்தவரை கெட்டியாக புளிப்பு இல்லாமல் இருந்தால் ஒரு சட்டி சோறு கூட சாப்பிடலாம் என்பார்கள் உழைப்பாளிகள்.
இங்கு சொல்லப்பட்டுள்ள முறையில் பாலை உறையுட்ட முதலாவதாக கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தயிரை சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு டம்ளர் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி டீ ஆற்றுவது மாதிரி அந்த பாலை ஆற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வீட்டில் உள்ள பீங்கானால் செய்யப்பட்ட ஜாடி அல்லது மண்பாண்டம் இரண்டில் ஏதாவது ஒன்றில் இதனை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும் இப்படி செய்தால் தயிர் கெட்டியாக ஆவதுடன் ரொம்ப நாள் புளிக்காமல் கடையில் கிடைக்கும் தயிர் போலவே ருசியாக இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டில் பல்லி தொல்லை நிரந்தரமா போகனுமா? ஒரு எலுமிச்சை போதும்.. பல்லியை ஓட ஓட விரட்டி அடிக்கலாம்