
இந்த உலகில் இறந்தவர்களின் உடலில் இருந்து வெளியேறும் ஆன்மா கடவுளிடம் சேராமல் தன நிறைவேறாத ஆசைகளை தீர்ப்பதற்காகவோ அல்லது யாரையேனும் பழி வாங்கவோ தான் தனக்கு பிடித்தவர்களின் உடம்பிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீதோ ஊடுருவி தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவதாக பல்வெறு கதைகள் கூறுகின்றன.
அவ்வாறு, பேய் ஊடுருவியதாக கூறப்படும் பொருட்களின் பட்டியலை இங்கே பார்க்க போகிறோம். தயவு செய்து கீழ்காணும் படங்களை யாரும் அதிக நேரம் பார்க்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்காணும் பட்டியலில் உள்ள எல்லா சம்பவங்களும் உண்மை சம்பவங்களாகும். நீங்கள் இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் கூகுளில் தேடிப்பாருங்கள்.
1849-களில் அரச குடும்பத்தை சேர்ந்த அண்ணா பேக்கர் என்பவள், சலவை செய்யும் நபரை காதல் செய்துள்ளார். அவரது அப்பா காதலுக்கு எதிராக நின்றார். காதல் தோல்வியால் வாடிப்போன அந்த பெண் பின்நாளில் யாரையும் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அண்ணா பேக்கர் தனது திருமணத்திற்காக ஒரு அழாகான திருமண ஆடையை வாங்கி வைத்திருந்தார். திருமணம் நின்று போனதால் அவர் அந்த ஆடையை போடவே இல்லை. பிறகு அந்த உடையை இன்னொரு பணக்கார பெண் ஏலத்தில் வாங்கிச் சென்றார். ஒரு முழு பௌர்ணமியன்று அந்த ஆடை தானகவே நடமாடுவதை கண்ட பெண், அதனை மீண்டும் அரசியாரின் மியூஸியத்திற்கே கொடுத்திவிட்டார். இன்றுவரையும் அந்த ஆடை நடனமாடுவதாக கூறப்படுகிறது. யார் நடமாடுறது தெரியுமா? நம்ம ஆனா பேக்கர் தான்.
இந்த கோர ஓவியத்தை யார் வரைந்தார் என்ற எந்தவொரு குறிப்பும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ராபின்சன் என்பவரது குடும்பத்திற்கு இந்த கோர முகம் கொண்ட ஓவியம் பரிசாக வந்தது. ஓவியம் வீட்டில் வந்ததிலிருந்தே பல்வேறு பிரச்னை மற்றும் இரவில் ஒரே மர்ம சத்தங்கள் ஒலிக்கத்தொடங்கின.
இந்த கோர முகம் கொண்ட ஓவியத்தை பற்றி ஆராய்ந்த போது, ஒருவர் தான் சாகும் தருவாயில் அந்த ஓவியத்தை வரைந்ததாகவும், அந்த ஓவியத்தில் ரத்தத்தையும் கலந்து வரைத்ததாகவும் கூறப்படுகிறது.
1702ம் ஆண்டு தன் மாமனார் மாமியாரையே கொலை செய்த தாம்சன் புப்சி என்பவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடைசி ஆசை என்னவென்று கேட்க, அவரோ தனக்கு பிடித்தமான மதுபான கடையில், பிடித்தமான மதுபானத்தை, தனக்கு பிடித்த இருக்கையில் அமர்ந்து குடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவரது ஆசையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தாம்சன் புப்சி புறப்படும் போது எனது இருக்கையில் யாரெல்லாம் உட்கிறார்களோ அவர்களை மரணம் தேடி வரும்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு அந்த இருக்கையில் அமர்ந்தவர்கள் நெடுநாள் வாழ்ந்ததில்லை. இப்போது அந்த சேர் தர்கீஸிலுள்ள ஒரு மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மியூசியத்தில் கூட யாரும் உட்காரக்கூடாத வண்ணம் இந்த சேர் 5 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.
ஜேக்கப் எனபவரிடம் மரப் பெட்டிகள் செய்யும் ஹோசே எனும் அடிமை வேலை பார்த்துவந்தார். தனக்கு பிறக்க போகும் குழந்தைக்காக ஒரு பெட்டியினை வடிவமைக்க ஹோசியாவிடம் கூறியிருந்தார். மிகவும் அழகான பெட்டியை செய்த போதிலும் ஹோசியாவை, ஜேக்கப்ர அடித்ததாக கூறப்படுகிறது. வலி தாங்கமுடியாத ஹோசியா இறுதியில் இறந்தே போனார். இதற்கு பழிவாங்க நினைத்த ஹோஷியோவின் நண்பர்கள் ஒன்று கூடி அந்த பெட்டியை தங்கள் ரத்தத்தால் சபித்தனர். பிறகு அந்த குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்தும் போனது. தொடர்ந்து ஜேக்கப் மற்றும் அவரது முதல் மகன், மகள் என அனைவரும் கெட்ட மரணம் அடைந்தனர். இந்த குறிப்புகள் அனைத்தும் ஜேக்கப் குடும்பத்தில் சுமார் 17 பேர் இறந்த பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த படத்தில் காணும் பொம்மையே உண்மையான அனபெல் பேய் பிடித்த பொம்மை தான். டோனா எனும் பெண் 28 வது வயதில் பிறந்தநாள் பரிசாக தனது தாயிடமிருந்து ஒரு பொம்மையை பெறுகிறாள். ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது தோழியுடன் வசித்து வரும் போது ஒர்நாள் இரவு அந்த பொம்மை அங்குமிங்கும் அலைவதை இருவரும் பார்த்துள்ளனர். பயந்து போன அவர்கள் அந்த பொம்மையை கண்காணிக்க தொடங்கினர். ஒரு நாள் வீட்டில் பொம்மையை ஹாலில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தால் பொம்மை வைத்த இடத்தில இல்லாமல் வேறொரு இடத்தில் இருந்ததால் இருவரும் பயத்தில் பீதியடைந்தனர்.
பொம்மைக்குள் பேய் இருப்பதை உணர்ந்த இருவரும் அதற்கான காரணத்தை தேடி பார்த்தனர், அப்போது அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்தில் முன்பு "அனபெல்" எனும் குழந்தை கொடூரமான முறையில் இறந்தது தெரியவந்தள்ளது.
தொடர்ந்து அந்த அனபெல் பொம்மையை "வாறன் அக்கல்ட் மியூசியத்திற்கு'' கொடுத்துவிட்டார். இன்று வரையும் தீய சக்தி கொண்ட அந்த பொம்மை சுத்தம் செய்வதற்கு கூட யாரும் வெளியில் எடுப்பதில்லை. அதனை தொடுவதற்கும் யாருக்கும் அனுமதியில்லை.ஒரு நாள் ஒரு ரேஸ் ஓட்டுநர் அந்த பொம்மையை தொட்டு பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் விபத்து நேர்ந்து இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.