எவ்வளவு தடுத்தாலும் இந்த கொசுக்கள் எப்படித்தான் வருகின்றன? என்கிற கேள்வி உங்களுக்குள் எப்போதாவது எழுந்துள்ளதா? கொசுக்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுபோன்று நம்மை நோக்கி அவை தொடர்ந்து வருவதற்கும் பல காரணங்கள் உண்டு. கார்பன் டை ஆக்சைடு, உடல் வியர்வை, அழுக்கு அல்லது பாதங்களில் துர்நாற்றம் உள்ளிட்டவற்றினால் மனித உடலில் இருந்து குறிப்பிட்ட ஒரு வாயு தோன்றும். அதனால் ஈர்க்கப்படும் போது கொசுக்கள் நம்மை வந்து கடிக்கின்றன. ஒரு 100 அடி தூரம் என்றாலும், அங்கு அமர்ந்து துர்நாற்றம் வீசுவதன் மூலம் அவை நம்மை எளிதில் அணுகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனுடைய வயிற்றுப் பிழைப்புக்கு நம்மை கடிக்கிறது என்றாலும், அதன்மூலம் நோய்களும் ஏற்படுகின்றன. கொசுக்களால் பல கொடிய நோய்கள் வரலாம். அதனால்தான் கொசுக்களை கொல்லவும் விரட்டவும் பல பொருட்கள் சந்தையில் உள்ளன. ஆனால் அது வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தி, உடலுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடுகின்றன. வீடுகளுக்கு கொசு வருவதை தடுக்கவும், கொசு மற்றும் ஈக்களால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், இயற்கையான முறையில் இருக்கும் தீர்வுகளை தெரிந்துகொள்வோம்.