இப்போது பலரும் குக்கரில் சாதம் சமைப்பதால் கஞ்சி கிடைப்பதில்லை. உங்களிடம் கஞ்சி தண்ணீர் இல்லையென்றால் ஒரு பக்கெட்டில் சூடான தண்ணீர் பாதி அளவு ஊற்றிக் கொண்டு அதில் 1/4 கை அளவு உப்பு போட்டு கரைத்து விடுங்கள். பின் துணிகளை போட்டு ஊற வைத்து விடுங்கள். 1 மணி நேரத்திற்கு பிறகு பிரஷ் வைத்து தேய்த்து துவைத்தால் ஆடைகளில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி சூப்பராக புதிது போன்று ஜொலிக்கும்.
துணிகளில் காபி, டீ கறை அல்லது எண்ணெய், குழம்பு, சாம்பார், போன்ற கறைகள் பட்டால் ,கறைகள் மீது சிறிது வினிகரை விட்டு ஷாம்பூ போட்டு ஊற வைத்து விட்டு சுமார் 1/2 நேரத்திற்கு பிளவு ஊறிய துணிகளை சூடான தண்ணீரில் டிப் செய்து சோப்பு போட்டு தேய்த்தால் போதும். கறை இருந்த இடம் காணாமல் போய்விடும்.
பொதுவாக துணிகளை சூடான தண்ணீரில் டிடெர்ஜென்ட் போட்டு குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது ஊற வைத்து துவைத்தாலே பிரஷ்சை போட்டு தேய்க்க அவசியம் இருக்காது. அழுக்குகள் இருக்கக்கூடிய காலர், மணிக்கட்டு (wrist ) அழுக்குகள் நீங்க, வினிகருடன் லெமன் சேர்த்து ஊற வைத்து துவைத்தால் அனைத்து அழுக்குகளும் உடனே நீங்கி விடும். இந்த ஈஸியான டிப்ஸ்களை நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து துணிகளை எப்போதும் புதுசாக வச்சுக்கோங்க!