உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தன் குடும்பத்துடன் மும்பையில் இருக்கும் அன்டிலியா எனும் வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் தோற்றமும் மதிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அன்டிலியா என்றால் அம்பானி வீடு என்பதை விட அம்பானி மாளிகை எனலாம். அவ்வளவு கண்கவர் உண்மைகளை கொண்டது அந்த கட்டிடம். அதன் சில உண்மை தகவல்களை இங்கு காணலாம்.
உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடான அம்பானியின் அன்டிலியா வீட்டில் 27 மாடிகள் உள்ளன. இந்த மாளிகை 8.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் வந்தாலும் அசையாமல் இருக்கும் வகையில் செம்ம தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 4,532 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்பா, சலூன், மூன்று நீச்சல் குளங்கள், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள் என எல்லா வசதிகளும் மாளிகைக்குள் இருக்கின்றன. பெரிய மாளிகை மட்டுமல்ல... இந்த மாளிகையை பராமரிக்க 600 பணியாளர்கள் கொண்ட குழு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாளிகையை சுற்றியுள்ள தோட்டத்தை சுத்தம் செய்து ஈரப்பதமாக வைப்பதோடு, வீட்டையும் பராமரிக்கிறார்கள்.
இவ்வளவு விலை உயர்ந்த மாளிகையை சும்மாவா விடுவார்கள். இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மாதம் ரூ 2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். வீட்டை கண்ணாடி போல மாசுபடாமல் வைத்திருக்க இவ்வளவு சம்பளமா? உண்மையில் இது வெறும் மாதச்சம்பளம் தான்.. அவர்களுக்கு வழங்கும் மற்ற சலுகைகளை இதில் சேர்க்கவில்லை.