இந்த ராசி பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள்.. இவங்க கூட இருந்தாலே உங்களுக்கும் வெற்றி தான்.. யார் அவங்க தெரியுமா?

Published : Mar 08, 2023, 12:24 PM ISTUpdated : Mar 08, 2023, 12:39 PM IST

International Women’s Day 2023: சாதனை பெண்கள் யார் என்பதை ராசிகளை வைத்து அறியலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

PREV
17
இந்த ராசி பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள்.. இவங்க கூட இருந்தாலே உங்களுக்கும் வெற்றி தான்.. யார் அவங்க தெரியுமா?

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்களின் சில குணங்களை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். சில பெண்களுக்குள் எப்போதும் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்கள் 'தீ' போல கனன்று கொண்டிருக்கும். அது மற்றவர்களையும் ஊக்குவிக்கும். சிலர் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களின் ராசியை இங்கு காணலாம். 

27
மேஷம்

இவர்களின் ஆளுமை மெச்சத்தக்கது. தங்கள் வாழ்க்கை இலக்குகளில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த பெண்கள் தங்கள் கனவுகள், ஆசைகளை அடைய எவ்வளவு தூரமும் பயணிக்க பயப்படுவதில்லை. உதவிகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இந்த ராசி பெண்கள் சாதிப்பார்கள். 

37
கடகம்

ரொம்ப உணர்திறன் கொண்டவர்கள். விசுவாசமாகவும் இருப்பார்கள் என்பதால் மற்றவர்களைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர். இந்த உணர்ச்சிமிக்க இயல்பு மக்களை எளிதில் ஈர்க்கிறது. சில சமயங்களில், கடக ராசி பெண்கள் மக்களிடமிருந்து விலகி இருக்க நினைப்பார்கள். ஆனால் மீண்டும் அதிக ஆற்றலுடன் திரும்பி வருவார்கள். கனவுகளை பின் தொடர தயாராக இருப்பார்கள். இது ஹீலிங் (Healing) டைம். 

47
சிம்மம்

ஒளிமயமாக வாழ அனைத்தையும் கொடுக்கும் தொழிலாளர்கள் இவர்கள். தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்த பெண்கள் தங்கள் உறவுகளில் மிகவும் அக்கறையோடு இருப்பார்கள். 

57
தனுசு

தணியாத சுதந்திர தாகம் கொண்டவர்கள். ஒவ்வொரு விதத்திலும் சவாலான திட்டங்களில் எப்போதும் வேலை பார்க்கிறார்கள். தனித்து செயல்படவே இந்த பெண்கள் விரும்புகிறார்கள். தங்கள் லட்சிய ஆர்வத்திற்கு தீனி போட்டு கொண்டே இருப்பார்கள். 

67
கும்பம்

இந்த பெண்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளனர். கலை, படைப்பாற்றல், கற்பனை மீது ஆர்வம் கொண்டவர்கள். ஒரு கும்ப ராசி பெண்ணுடன் இருப்பது உண்மையிலேயே ஒரு அதிசயம். அவளுடன் நேரத்தை செலவிடுவது ஒரு நபருக்கு வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக்கொடுக்கும். 

இதையும் படிங்க: சனியிடம் இருந்து விடுவிக்கும் நீலக்கல்... இந்த 4 ராசியினர் அதை அணிந்தால் செம்ம அதிர்ஷ்டம் கிடைக்குமாம்..

77

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் அதிக கவனம் செலுத்தமாட்டார்கள். ஓயாமல் எதையும் பின்தொடர்வதும் கிடையாது. 

இதையும் படிங்க: வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிம்மதி சுத்தமா இருக்காது.. ஓயாமல் சண்டை சச்சரவு தான்.. இதை பண்ணி பாருங்க..

click me!

Recommended Stories