Women's Day Chefs: உணவில் உச்சம் தொட்ட பெண் சமையல் கலைஞர்கள்!

First Published | Mar 8, 2023, 3:28 PM IST

வீட்டு சமையலறைக்குள் மட்டும் முடங்கிவிடாமல் தங்கள் ஆர்வத்தை விரிவு செய்து சாதித்த பெண்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் சமையல் துறையில் சாதித்த ஐந்து பெண்களைப் பற்றிய தொகுப்பு இது.

ரிது டால்மியா

தன்னைத்தானே கற்றுக்கொண்ட சமையல்காரரான ரிது டால்மியா, இத்தாலிய உணவு வகைகளுக்குப் பிரபலமானவர். டெல்லியில் உள்ள திவா, மும்பையில் உள்ள மோட்டோடோ போன்ற பிரபலமான உணவகங்களின் உரிமையாளராக உள்ளார். பல சமையல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அனாஹிதா தோண்டி

டெல்லி தாஜ்மஹால் ஹோட்டல் மற்றும் சோடா பாட்டில் ஓப்பனர் வாலா ஆகியவற்றில் பணிபுரிந்தவர் அனாஹிதா தோண்டி. பணியாற்றிய இடங்களில் சிறந்த பார்சி உணவு வகைகளை அறிமுகப்படுத்தினார். அவரது கஃபே சிறந்த பார்சி உணவை விரும்புவோருக்கு விருப்பமான இடமாக மாறியுள்ளது.

Tap to resize

ராதிகா கண்தெல்வால்

ராதிகா கண்தெல்வால் சமையல் துறையில் உள்ளூரில் கிடைக்கும் பொருட்களையும் அந்தந்த காலத்தில் கிடைக்கும் பொருட்களையும் பயன்படுத்தும் போக்குக்கு முன்னோடி. இவரது ஐவி அண்ட் பீன் மற்றும் ஃபிக் அண்ட் மேப்பிள் ஆகிய இரண்டு உணவகங்களும் ஆர்கானிக் உணவுகளை சிறப்பாகத் தயாரித்து வழங்குகின்றன.

கைனாஸ் கான்ட்ராக்டர்

கைனாஸ் கான்ட்ராக்டர் உணவுத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளார். ரெஸ்டாரண்ட்களில் மேனேஜர் பணியில் தொடங்கி பிபிசி குட்ஃபூட் இதழின் ஆசிரியர் பணி வரை பல்வேறு நிலையளில் பணிபுரிந்தவர். டெல்லியின் சத்தர்பூரில் உள்ள கஃபே டோரி காபி பிரியர்களின் புகலிடமாக உள்ளது.

அனன்யா பானர்ஜி

அனன்யா பானர்ஜி பங்களா காஸ்ட்ரோனமி மற்றும் பிளானட் காஸ்ட்ரோனமி என்ற இரு புகழ்பெற்ற சமையற்கலை நூல்கறை எழுதியவர். பிபிசி குட்ஃபூட் இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர்.

Latest Videos

click me!